பயமே இல்லை.. மங்களூரில் மாஸ் காட்டிய தமிழக மாணவிகள்.. திருடனை விரட்டி சென்று பிடித்த சிங்க பெண்கள்
சென்னை: மங்களூர் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட திருடனைத் துணிச்சலுடன் பிடித்துக் கொடுத்த திருவாரூர் மன்னார்குடி மாணவிகளைப் பாராட்டு குவிந்து வருகிறது.
நமது நாட்டில் பெண்கள் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தாலும் கூட, வீடுகளிலேயே பெண்களைத் துணிச்சலாக எந்த செயலையும் செய்ய அனுமதிப்பது இல்லை என்பதே உண்மை.
ஆனாலும், சில பள்ளிகளில் கொடுக்கப்படும் பயிற்சி, ஆசிரியர்களின் உத்வேகம் காரணமாக மாணவிகள் துணிச்சலான பல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் திருவாரூரில் நடந்துள்ளது.

அரசு பள்ளி மாணவிகள்
நமது ஊரில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் சாரணர் சாரணியர் இயக்கம் இருப்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற சாரணர் சாரணியர் இயக்கத்தில் மாணவிகளே அதிகம் இணைவார்கள். இருப்பினும், சமீப காலங்களில் இந்த சாரணர் சாரணியர் இயக்கத்தில் மாணவிகளும் அதிகளவில் ஆர்வத்துடன் இணைந்து வருகிறார்கள். அப்படித்தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள நூவாநல்லூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் சாரணர் சாரணியர் இயக்கத்தில் மாணவிகள் பலரும் இணைந்துள்ளனர்.

மங்களூர் விமான நிலையம்
அவர்கள் சமீபத்தில் கர்நாடகா மங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சாரணர் சாரணியர் பண்பாட்டுக் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர்கள் ஊர் திரும்ப மங்களூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிரியரின் செல்போனை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கத்தினர். அதேநேரம் அங்கு இருந்த 4 மாணவிகள் திருடனைத் துரத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

திருடனைப் பிடித்த மாணவிகள்
அவர்கள் திருடனைத் துரத்தி பிடித்து செல்போனை மீட்டனர்.. இதையடுத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட அந்த திருடனை ரயில்வே காவர்களிடமும் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான ஃபோட்டோ்ககள் இணையத்தில் வெளியானது. துணிச்சலாகச் செயல்பட்ட அந்த பெண்களை நெட்டிசன்கள் பலரும் பாராட்டித் தள்ளி வருகின்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், திருவாரூர் எஸ்பியும் மாணவிகளை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.

என்ன நடந்தது
இந்தச் சம்பவம் குறித்து திருடனைத் துணிச்சலாகத் துரத்திப் பிடித்த மாணவி கவுசல்யா கூறுகையில், "ஆசிரியர் எங்களுக்கு எப்போதுமே உத்வேகம் அளிப்பார். அவர் கொடுத்த தைரியத்தால் தான் இதைச் செய்ய முடிந்தது. இரவு நேரத்தில் திடீரென செல்போனை அந்த திருடன் பிடுங்கிச் சென்றார். திருடனை நாங்கள் நான்கு பேரும் இணைந்து துரத்திச் சென்று பிடித்தோம்.. சாரணர் இயக்கத்தில் எங்களுக்குத் துணிச்சலாக இருக்கப் பல பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் காரணமாகவே எங்களால் திருடனைத் தைரியமாகத் துரத்திப் பிடிக்க முடிந்தது" என்றார்.

பாராட்டு
இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி கூறுகையில், "சாரணர் சாரணியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தமிழகம் திரும்பக் காத்திருந்த போது தான் செல்போன் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதைப் பார்த்தும், எனது பள்ளி மாணவ மாணவிகள் திருடனை விரட்டி பிடித்துள்ளனர். சாரணர் இயக்கத்தின் பெற்ற பயிற்சியே துணிச்சலுக்குக் காரணம். இந்தச் சம்பவத்திற்கு எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

நெட்டிசன்கள்
மங்களூர் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட திருடனைத் துணிச்சலுடன் பிடித்துக் கொடுத்த திருவாரூர் மன்னார்குடி மாணவிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அனைத்து மாணவ மாணவிகளும் இப்படித்தான் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications