இந்தியாவுடன் மோதல்: கனடா வாழ் தமிழர்கள் நிலை குறித்து தமிழ்நாடு அரசு நாளை ஆலோசனை!
சென்னை: இந்தியாவுடன் மோதல் போக்கை கனடா அரசு கடைபிடித்து வரும் நிலையில் அங்கு வாழும் தமிழர்கள் நிலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலிஸ்தான் எனும் இந்தியாவில் சீக்கியர் தனிநாடு கோரும் அமைப்புகளில் ஒன்றின் தலைவரான நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நிஜ்ஜாருக்கு அந்நாட்டு குடியுரிமை கொடுத்தது.

கனடா குடியுரிமை பெற்ற நிஜ்ஜாரை இந்தியா ஏஜென்சிகள்தான் படுகொலை செய்தது என்பது அந்நாட்டின் பகிரங்க குற்றச்சாட்டு. இதனால் இரு நாடுகளிடையேயான உறவு முறியும் நிலை உருவாகி உள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேற்றப்பட்டார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து நாட்டில் இருந்து கனேடிய தூதரக மூத்த அதிகாரியை வெளியேற்றியது.
மேலும் கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசும், கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் கனடா நாட்டவருக்கான விசா சேவைகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
காலிஸ்தான் பின்னணி என்ன?: இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக 1980கள் முதல் 1990கள் வரை ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 1990களில் காலிஸ்தான் இயக்கம் அழிக்கப்பட்டது.
இதனையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கும் போய் காலிஸ்தான் தனிநாட்டுக்கான இயக்கங்களை இந்த பயங்கரவாதிகள் நடத்தினர். இப்படியான இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் புலிப் படை. இதன தலைவரான நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதால் தற்போது இந்தியா- கனடா இடையே மோதல் வெடித்துள்ளது. கனடா, இந்தியா நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகள் தற்போது நமது நாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications