வந்துச்சு பாருங்க சூப்பர் அறிவிப்பு..வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா? 600 சிறப்பு அரசு பேருந்துகள் ரெடி
சென்னை: சனி, ஞாயிறு வார விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் நபர்கள் கூட்ட நெரிசலின்றி சுலபமாக செல்லும் வகையில் 600 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்க இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் 9 ஆம் தேதி (2-ம் சனிக்கிழமை), 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8ஆம் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 10 ஆயிரத்து 545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8 ஆம் தேதி (நாளை) தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 9 ஆயிரத்து 299 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், 8 ஆம் தேதி (நாளை) வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா முடிவடைவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக அதாவது பெங்களூரு, சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications