சரவெடி, பேரியம் கலந்த பட்டாசுகளை வெடித்தால்...குற்றவியல் நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளைத் தயாரித்தாலோ, விற்றாலோ, வெடித்தாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்று மாசும் பருவநிலை மாற்றமும் உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

குறிப்பாகக் காற்று மாசு காரணமாகச் சுவாசப் பிரச்சினை தொடங்கி பல்வேறு பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

தீபாவளி

தீபாவளி

இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாகத் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்க பல்வேறு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. டெல்லி போன்ற ஒரு சில மாநிலங்களில் காற்று மாசு காரணமாகப் பட்டாசு வெடிக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 பட்டாசு வெடிக்கும் நேரம்

பட்டாசு வெடிக்கும் நேரம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடித்தாலோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனச் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளைத் தயாரித்தாலோ, விற்றாலோ, வெடித்தாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "''உச்ச நீதிமன்றம் தனது 29.10.2021ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, எதிர் வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின்போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளைத் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

 உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

மேற்படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில், சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைக்கவும், கொண்டுசெல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 குற்றவியல் நடவடிக்கை

குற்றவியல் நடவடிக்கை

பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை, சரவெடி உட்பட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+