நீட் தேர்வு.. திமுக அரசை குற்றம்சாட்டிய இ.பி.எஸ், அண்ணாமலை.. உடனே பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சு!
சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
Recommended Video
நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதி இருக்கின்றனர். முதன்முறையாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி உள்ளனர்.

மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன. டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். இதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார்.

உயிரை பறித்திருக்கிறது
தமிழ்நாடு சட்டசபையில் நாளை நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. ஆனால் இன்று நீட் தேர்வு நடந்து விட்ட நிலையில் இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? என்று விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு மேலும் ஒரு மாணவரின் உயிரை பறித்திருக்கிறது.

மசோதா
ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் இன்றும் நீட் தேர்வு எழுதினால் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயந்து தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவரின் மரணம் வேதனையடைய செய்வதாக தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது""நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என்று கூறியுள்ளார்.

திமுக பலிவாங்குகிறது
அதே வேளையில் மாணவரின் தற்கொலைக்கு காரணம் தி.மு.க என்று கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்று திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதியை மறந்த விடியல் அரசால், இன்று மாணவனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது '' என்று கூறினார். இதேபோல் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ' இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் திமுகதான் மாணவரின் மரணத்திற்கு காரணம். மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்குகிறது திமுக' என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

மா. சுப்பிரமணியன் கண்டனம்
இந்த நிலையில் அதிமுக, பாஜக குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். ''குறைந்த கால அவகாசம் இருந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை. நாளை சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். நீட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்.மாணவர்கள் யாரும் தவறான முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

சாயம் வெளுத்து விட்டது
வரும் ஆண்டுகளில் சட்ட ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படும். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது. அவர்களின் சாயம் வெளுத்து விட்டது. நீட் தேர்வு என்றும் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான கொள்கை. ஆனால் தமிழக பாஜக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதை என்றும் விரும்பவில்லை'. இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications