"முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% அமலுக்கு வந்து சாதனை”! டிஆர்பி ராஜா சொன்ன சேதி
சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு வந்து சாதனை படைத்துள்ளது. எந்த அரசும் செய்யாத சாதனையை திராவிட மாடல் அரசு செய்துள்ளது என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி சுற்றுப் பயணத்திற்கான தேதி இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும், இதுவரை 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இணையாக தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை ஒன்றிய அரசு வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடுகிறது என்று குற்றம்சாட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 2024 முதலீட்டாளர் மாநாட்டில் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அவற்றில் 80 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஐரோப்பாவிலும் "TN Rising" மாநாடு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications