82.52%.. உச்சத்தை தொட்ட தமிழ்நாடு.. இந்தியாவிலேயே நம்பர் 1.. இதெல்லாம் யோசிக்க முடியாத சாதனை
சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 82.52 சதவீத திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு நம்பர் 1 என்று உறுதியாய் உள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற 'கன்வர்ஷன் மாநாடு 2026' (Conversion Conclave 2026) நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த முக்கிய புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: "தமிழகம் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவிலான அசுர வளர்ச்சியை எட்டி வருகிறது. இத்தகைய 'கன்வர்ஷன் மாநாட்டை' நடத்தும் துணிச்சலும் திறமையும் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லை. கொரோனா பேரிடர் காலத்தில் பொறுப்பேற்ற எங்களது அரசு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது."
வேலைவாய்ப்பில் புதிய உச்சம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் வேலைவாய்ப்பு உருவாக்கம் புதிய உயரத்தைத் தொட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம்: 36,52,000 வேலைவாய்ப்புகள்.
EPFO தரவுகளின்படி: 29.63 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம், இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு மிகப்பெரிய உந்துசக்தியாகத் திகழ்வதாகவும் அவர் பாராட்டினார்.
ஐடி துறையும் 'டைடல் நியோ' பூங்காக்களும்
மறைந்த முன்னாள் முதல்வர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் விதைக்கப்பட்ட ஐடி துறையின் வளர்ச்சி, தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் உருவாக்கிய டைடல் பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒன்றாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் ஐடி கட்டமைப்பை விரிவுபடுத்த 'டைடல் நியோ' (TIDEL NEO) பூங்காக்களை முதல்வர் உருவாக்கி வருகிறார். இதுவரை 17 டைடல் நியோ பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன," என அமைச்சர் தெரிவித்தார்.
4 ஆண்டுகளில் 30 சிப்காட் வளாகங்கள்
தொழில் பரவலாக்கல் குறித்துப் பேசிய அவர், "1971 முதல் 2021 வரை தமிழகத்தில் 24 சிப்காட் (SIPCOT) வளாகங்களே இருந்தன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் முதல்வர் 30 புதிய சிப்காட்களைத் தொடங்கியுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் அசைக்க முடியாத ராஜாவாகத் திகழ்கிறது," என்றார்.
நீலப் பொருளாதாரம் மற்றும் கப்பல் கட்டும் தளம்
தமிழகத்தின் 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரையைப் பயன்படுத்தி 'நீலப் பொருளாதாரம்' (Blue Economy) மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் 'ஹெச்டி ஹூண்டாய்' (HD Hyundai) நிறுவனத்தின் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமையவிருப்பது தூத்துக்குடியின் வரலாற்றையே மாற்றியமைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
முதலீடுகளின் நிலவரம் - ஒரு பார்வை
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முதலீட்டு விவரங்கள்:
ஒப்பந்தங்கள்: 1,130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
முதலீடு: ₹10,43,654 கோடி.
உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்: 33,30,843.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 69.56% திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஜப்பான், தைவான், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு உதவ தனி உதவி மையங்கள் (Guidance Desk) அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"திராவிட மாடல் 2.0" திட்டத்தின் கீழ், தமிழகத்தை உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையமாக மாற்றுவதே இலக்கு எனத் தெரிவித்த அமைச்சர், "கடின உழைப்பே எமது பலம், சமூக நீதியே எமது அடித்தளம்" என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங்












Click it and Unblock the Notifications