உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. தமிழ்நாட்டை புகழ்ந்த ஆனந்த் மகிந்திரா.. சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா, இந்தியா அபரிமிதமான வளர்ச்சி அடையும் என்பதில் எனக்கு சந்தேகமும் இல்லை. இதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் என்று கூறினார்.

சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50- நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், வின் பாஸ்ட் உள்ளிட்ட 12 பெரிய நிறுவனங்கள் ரூ.57,354 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.முதல் நாளிலேயே மாநாட்டின் இலக்கான ரூ.5½ லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து விட்டதாக, தொழில் துறை செயலாளர் அருண் ராய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

tn-is-at-the-forefront-of-the-development-of-india-says-anand-mahindra-global-investors-meet

இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொழில் முதலீடு ரூ.6 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவது நாளான நேற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தமிழக அரசுடன் பறிமாறிக்கொண்டன.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கூறினார். இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த விழாவில், இங்கிலாந்து நாட்டு இணை அமைச்சர் லார்டு தாரிக் அகமது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் பிற துறை அமைச்சர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட தொழிலதிபர்கள், துறை வாரியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற தொழில் அதிபர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியதாவது:-

இந்த மாநாடு மிகப்பெரும் வெற்றி என நான் நினைக்கிறேன். பெருமளவில் இங்கு பொதுமக்கள் கூட வந்து இருப்பதை பார்க்கும் போது தமிழகத்தின் வளர்ச்சி மீதான அவர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. இந்தியா அபரிமிதமான வளர்ச்சி அடையும் என்பதில் எனக்கு சந்தேகமும் இல்லை. இதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டை நான் ஏன் மிகவும் உறுதியாக நம்புகிறேன்? உண்மையை சொல்வதென்றால் அது நான் படித்த பள்ளியில் இருந்து தொடங்கியது. தமிழ்நாட்டில் ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்தேன். அது மிகவும் அற்புதமான பள்ளிக்கூடம். அது தனியார் பள்ளி அல்ல, அரசால் நடத்தப்பட்ட ராணுவ பயிற்சி பள்ளி.

நான் தமிழ்நாட்டில் இருந்து என்ன கற்றுக்கொண்டேன் என்றால் கற்பிக்கப்படுகிறது. உயர்ந்த இலக்கை அடைவது கல்வியால் சாத்தியமாகிறது" என்றார். ஆனந்த் மகிந்திராவின் மஹிந்திரா நிறுவனம் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.1,800 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+