நாம் தமிழருக்கு ஏமாற்றம்.. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தோல்வி -ஒரு இடத்திலும் முன்னிலை இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான முன்னணி நிலவரங்கள் தெரிய வந்துள்ளன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

நாம் தமிழர்

நாம் தமிழர்

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. ஊரக அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதால் இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று என்ற முழக்கத்துடன் ஊரக ரீதியான பிரச்சாரங்களை நாம் தமிழர் மேற்கொண்டது. அதோடு வடமாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த தீவிரமாக முயன்றது.

கவனம்

கவனம்

சீமானின் சமீபத்திய பேட்டிகள் காரணமாகவும், தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி வைத்து வரும் விமர்சனங்கள் காரணமாகவும் நாம் தமிழர் கட்சி இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னிலை

முன்னிலை

மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிக்கான தேர்தல் எதிலும் நாம் தமிழர் எங்கும் முன்னிலை பெறவில்லை. 9 மாவட்டங்களிலும் நாம் தமிழர் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லையிலும் நாம் தமிழர் சறுக்கி உள்ளது. நாம் தமிழர் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய வட மாவட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

அமமுக

அமமுக

அமமுக கூட ஒன்றிய கவுன்சிலருக்கான பொட்டில் நெல்லை நாங்குநேரி 6வது ஒன்றியத்தில் வென்றுள்ளது. பாமக இரண்டு ஒன்றியங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றியத்தில், மாவட்டத்திலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் முன்னிலை வகிக்கவில்லை. தற்போது நிலவரப்படி மாவட்ட கவுன்சிலருக்கான 140 இடங்களில் 120 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் 11, கள்ளக்குறிச்சியில் 16, விழுப்புரம் 26, தென்காசியில் 14, வேலூர், திருநெல்வேலி 8, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் தலா 9, செங்கல்பட்டு 15 என்று 120 மாவட்ட கவுன்சிலருக்கான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக செங்கல்பட்டு, திருப்பூரில் தலா 1, விழுப்புரத்தில் 2 என்று 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலர்

ஒன்றிய கவுன்சிலர்

ஒன்றிய கவுன்சிலருக்கான 1380 இடங்களில் 194 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காஞ்சிபுரம் 25, செங்கல்பட்டு 12, வேலூர் 21, திருப்பத்தூர் 8, ராணிப்பேட்டை 14, விழுப்புரம் 27, கள்ளக்குறிச்சி 21, நெல்லை 15, தென்காசி 51 என்று மொத்தம் ஒன்றிய கவுன்சிலருக்கான 194 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 11, பாமக 2 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+