வட தமிழ்நாட்டில் விசிகவின் விஸ்வரூபம்.. அதிமுக, பாமகவை விட அதிக இடங்களில் வெற்றி.. பின்னணி!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை வென்று அசத்தி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கிறது. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் பெரும்பாலான பதவிகளை திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள்தான் பிடித்து இருக்கின்றன.
ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கியமான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தான் அதிகம் பிடித்துள்ளன..

எத்தனை இடங்கள்
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 1003 இடங்களில் திமுகவும், 211 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 42 இடங்களில் பாமகவும் முன்னிலை வகிக்கிறது.

விசிக
இதில் 9 மாவட்டங்களில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கைப்பற்றுகிறது . திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விடுதலை சிறுத்தைகள் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றுகிறது. விழுப்புரம் மரக்காணம் வார்டு எண் 10, காஞ்சிபுரம் வார்டு எண் 8, திருப்பத்தூர் வார்டு 8 மாவட்டங்களில் தலா 1 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் விசிக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக
அதிமுக மொத்தமாக கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை மட்டுமே வெல்லும் நிலையில் முன்னிலை வகிக்கிறது. செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் தலா 1 மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக எங்கும் முன்னிலை வகிக்கவில்லை.

பாமக
தனித்து போட்டியிட்ட பாமக 42 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் முன்னிலை வகித்தாலும் கூட பாமக ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியில் கூட முன்னிலை வகிக்கவில்லை. ஆனால் விசிக திமுக கூட்டணியில் இடம்பெற்று 3 மாவட்ட கவுன்சிலர்களை பெற்றுள்ளது. பாமக வலுவாக இருக்கும் என்று கருதப்பட்ட வட மாவட்டங்களில் மோசமாக சறுக்கி உள்ளது.

விசிக எழுச்சி
ஆனால் அதே வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வடமாவட்டங்களில் சட்டசபை தேர்தலின் போதே சிறப்பாக செயல்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மூன்று வடமாவட்டங்களில் தலா 1 மாவட்ட கவுன்சிலர்களை வென்று விசிக தனது பலத்தை நிரூபித்துள்ளது.












Click it and Unblock the Notifications