1 கோடியே 60 லட்சம் வியூவ்ஸ்! ‘ஏழைத்தாயின் மகனா’ மோடி? அம்பலப்படுத்திய யூடியூப்பர் துருவ்!
சென்னை: பிரதமர் மோடியைப் பற்றி யூடியூப்பர் துருவ் ராதீ வெளியிட்டுள்ள வீடியோஒன்று இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் வைரலாகி வருகிறது.
வடநாட்டில் நிலவும் மோடி செல்வாக்கை தலைகீழாக கொட்டிக் கவிழ்த்துள்ளார் துருவ் ராதீ.

இவர் ஒரு 29 வயது இளைஞர். இவர்தான் மோடியின் பொய்களை பொதுவெளியில் போட்டு அம்பலப்படுத்தியுள்ளார். இன்றைக்கு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு துருவ் ராதீயின் புகழ் உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
அவர் அப்படி என்ன செய்தார்? யார் இந்த இளைஞர்? இப்படிப் பல்வேறு கேள்விகள் உள்ளன. இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தக் நகரில் வசித்து வருகிறார். கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்த இவர், அந்த மாநிலத்தில் மிக முக்கியமான ஒரு யூடியூப்பர் மற்றும் விலாக்கர். இன்னும் அழுத்தி சொன்னால் ஒரு ஆக்டிவிஸ்ட்!
இவரது யூடியூப்பை 19 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் பிரதமர் மோடி பற்றி வெளியிட்ட ஒரு வீடியோ 1 கோடி 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டுள்ளது.
அந்த வீடியோவில் அப்படி என்ன சொல்லிவிட்டார் இவர்? அதுதான் சுவாரஸ்யம். பிரதமர் மோடியின் பிரபலமான வாசகம் 'ஏழைத்தாயின் மகன்' என்பது. இந்தப் பிரகடனத்திற்கு பின்னால் ஒளிந்துள்ள பொய்கள் என்ன என்பதைத்தான் இந்த யூடியூப்பர் வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறார்.

அதைப்போல பிரமர் ரயில் நிலையத்தில் டீ விற்றுத்தான் தனது இளமைக் காலம் கழிந்தது என்றும் அவர் அடிக்கடி சொல்லி வருக்கிறார். இதை அவர் பல வருடங்களாக தேர்தல் பரப்புரையின்போது சொல்லி வருகிறார். இதனால் ஈர்க்கப்பட்ட அடித்தட்டு ஏழை மக்கள் மோடியை தங்களின் நாயகனாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த 'ஏழைத்தாயின் மகன்' வாசகம்தான் கடந்த தேர்தலில் 300 சீட்டுகளுக்கு மேல் பாஜகவை வெல்ல வைத்தது. பாஜகவைப் பொறுத்தவரை அது ஒரு மந்திரச் சொல்.
ஆனால், துருவ் ராதீ என்ற இந்த இளம் யூடியூப்பர் மோடியின் கடந்த காலத்திற்குச் சென்று அவர் 'ஏழைத்தாயின் மகன்' இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி இருக்கிறார்.
மேலும் எப்படி பாஜக மூன்று விதமான டிப்பார்ட்மெண்ட்கள் வழியே மக்களை மூளைச்சலவை செய்கிறது என தனித்தனியே வீடியோக்கள் போட்டு பாஜகவின் முகத்திரையைக் கிழித்து காட்டியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் வடமாநிலங்களில் பெரிய அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. பல ஊர்களில் இன்னும் மின்சாரவசதி கூட இல்லை. கழிப்பறை வசதி, சாலை வசதி என எதுவும் நிறைவேற்றப்பட்டவில்லை. ஆனாலும் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் பாஜகவை மிகவும் நம்புகின்றனர்.

ஒரு பெண்மணி சொல்கிறார், 'பாஜக சார்பில் ஒரு நாயை நிறுத்தினாலும் அது இங்கே வெற்றி பெறும்' என்று. அதைப்போல அவர் 'மோடிக்கு நான் தொண்டன் அல்ல பக்தை' என்கிறார்.
அந்தளவுக்கு பாஜகவின் மதவாதக் கருத்துகள் இவர்களை ஈர்த்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் மக்களை பாஜக அடிமைகள்போல மாற்றி வைத்துள்ளது என்று கூறியுள்ளார் துருவ் ராதீ.
ஜூன் 2013 ஆம் ஆண்டு Nilanjan Mukhopadhyay என்பவர் மோடியைப் பற்றி ஒரு சுயசரிதை புத்தகம் எழுதி இருப்பதிலிருந்து ஆரம்பமாகிறது துருவ் ராதீ வெளியிட்டுள்ள மோடியைப் பற்றிய வீடியோ.
அந்தப் புத்தகத்தில் மோடி, குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில்வே ஸ்டேஷனில் 6 வயதில் டீ விற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, நான் வறுமையில் பிறந்தவன் என்றும் மோடி கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, நான் வறுமையை வெல்ல அன்றுதான் சபதம் ஏற்றேன் என்றும் அவர் சொன்ன வாசகங்களை இந்த யூடியூப்பர் சுட்டிக்காட்டி பேச தொடங்குகிறார்.
மோடி 1950 இல் பிறந்தவர். அவர் வறுமையில் பிறந்ததாக சொல்கிறார். ஆனால், மோடி தனது இளம் வயதில் சிறுவனாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, அதில் அவர் கோட் சூட் உடன் காட்சி அளிப்பதை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார் துருவ்.
எப்படி வறுமையில் டீ விற்ற இவர் கோட் சூட் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்திருக்க முடியும்? அது மட்டுமல்ல அவரது படங்கள் வறுமையை பிரதிபலிக்கவே இல்லையே எப்படி? எனக் கேட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, நான் 1994இல்தான் பிறந்தேன். எனக்கே குழந்தைப் பருவத்தைக் காட்டுகின்ற புகைப்படங்கள் ஒன்றுகூட இல்லை. காரணம், வறுமை. ஆனால் மோடி கோட் சூட் போட்டு டை எல்லாம் கட்டி உள்ளார். அது எப்படி என்கிறார் துருவ்.
மோடி வறுமையானவர் இல்லை. வறுமையிலும் வயிமையில் பிறந்ததாக சொன்னவர்.
ஆனால், அவர் பிறந்த வீடு என்று 'இந்தியா டுடே' ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த வீடு குடிசை வீடு இல்லை. அது ஒரு மாடி வீடு. மாடி வீட்டில் பிறந்த இவர் எப்படி ஏழையாக இருந்திருக்க முடியும்?
இந்த வீடியோவில் மோடியின் சகோதரர் ஒருவர் விழா ஒன்றில் பேசும் வீடியோவை துருவ் இணைத்துள்ளார்.
அதில் மோடியின் சகோதரர், "சகோதரர்கள் நாங்கள் அனைவரும் டீ விற்றோம். என் தந்தை வாழ்நாள் முழுவதும் டீ விற்றார். அவரது வாழ்நாள் முழுக்க அந்த வேலையை அவர் செய்தார். மோடியை டீ விற்றவரின் மகன் என்று அழைப்பதே சரி. மோடி டீ விற்றவர் இல்லை. அது நிருபர்கள் சொன்ன தவறான செய்தி' என்று வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் 'இந்தியா டுடே' கட்டுரை ஒன்று மோடியின் தந்தை டீ விற்றவர் இல்லை. அவர் அந்த ரயில்வே ஸ்டேஷனின் கேண்டீன் வைத்திருந்தவர் என்று சொல்லி, அதற்காக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதை சுட்டிக் காட்டி பேசியுள்ளார் இந்த யூடியூப்பர்.
இதை எல்லாம் படித்த போதுதான் எனக்குள் பெரிய சந்தேகம் எழுந்தது என்கிறார் துருவ். ஆகவே தேட ஆரம்பித்தபோதுதான் ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன்.
உலகில் உள்ள பல சர்வாதிகாரிகள் தங்களை வறுமையில் இருந்து வந்தவர்கள் என்றே சொல்லிக் கொண்டுள்ளனர். கம்போடியாவில் இருந்த சர்வாதிகாரி போல் போட். அவர் தன்னை வறுமையில் இருந்து வந்தவர் என்றே சொன்னார். அதைப்போல் இத்தாலியன் சர்வாதிகாரி முசோலினியும் அதையே சொன்னார்.
இவர்களைப் போலவே ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் கூட தன்னை வறுமையில் இருந்து வந்தவன் என்றே பிரகடனப்படுத்திக் கொண்டார். இவர்களுக்கு எல்லாம் மேலான ஹிட்லர் தன்னை வறுமையில் பிறந்தவன் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், இவர்கள் யாரும் உண்மையி்ல் வறுமையில் பிறந்தவர்கள் இல்லை.
அதைப்போலவே மோடியும் தன்னை ஏழைத்தாயின் மகன் என்றார். ஹிட்லருக்கு பிரபல கார் நிறுவனங்கள் உட்பட பல பணக்கார கம்பெனிகள் நன்கொடை வழங்கின. அதைப்போலத்தான் மோடியின் கட்சிக்கு பல கார்பரேட் கம்பெனிகள் நிதியை அள்ளி கொடுத்துள்ளனர்.
அதைத்தான் தேர்தல் பத்திர ஊழல் என்று பலரும் சொல்கின்றனர். இப்படி வரிக்கு வரி மோடியும் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் துருவ். இந்த வீடியோ தான் இப்போது 1 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களை சுண்டி இழுத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications