‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு சென்றபோது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பார்த்து அவர் செய்த செயல் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகள் உள்பட நேற்று முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்து முடிந்தது.

பெரும்பாலான இடங்களில் ஓட்டுப்பதிவு என்பது அமைதியாகவே நடந்து முடிந்தது. சில பூத்களில் மட்டும் லேசான கைக்கலப்பு, வாக்குவாதம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனை என ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளும் உடனடியாக சரிசெய்யப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள், இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தான் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தென்சென்னை தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்பியான அதிமுகவின் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டுள்ளார். தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஓட்டளித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஓட்டளித்தார். இந்நிலையில் தான் ஓட்டளிக்கும் முன்பு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தமிழிசை சவுந்தரராஜன் கையெடுத்து கும்பிட்டுள்ளார். அவர் பாஜக வேட்பாளராக தென்சென்னையில் போட்டியிடும் நிலையில் ரிசல்ட் தனக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக அவர் கடவுளை மனமுருகி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கும்பிட்டுள்ளார். அதன்பிறகு அவர் ஓட்டளித்துவிட்டு கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக நேற்றைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டளிக்க சென்ற வாக்குச்சாவடியில் தான் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் ஓட்டளிக்க வந்தனர். அப்போது அவர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை ஆரத்தழுவி கைக்குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதேபோல் விஜயகாந்தின் மகன்கள் 2 பேரிடமும் தமிழிசை சவுந்தரராஜன் கைக்குலுக்கினார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பாஜகவினர் 19 இடங்களில் போட்டியிடுகின்றனர். 4 இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக தேமுதிமுக, அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் களமிறங்கி உள்ளது. விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்றைய தினம் ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில் ஜுன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications