’கூட்டிகிட்டு போனார்’.. வேலூரில் பெரியார் மணியம்மை திருமணம் குறித்த பேச்சு- துரைமுருகன் வருத்தம்!
சென்னை: வேலூரில் திமுக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார்- மணியம்மை திருமணம் குறித்து பேசியதற்காக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் திமுக எப்படி உருவானது என விவரித்திருந்தார்.

அமைச்சர் துரைமுருகன் தமது பேச்சில், கழகம் (திமுக) பிறந்ததற்கு நாங்கள்தான் (வேலூர்) காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் கழகம் பிறந்திருக்காது. திமுக உருவாகி இருக்காது. திராவிடர் கழகமாக பெரியாரிடத்திலே பணியாற்றி இருந்தோம். பெரியார் எங்கள் ஊருக்கு (வேலூருக்கு) வந்தார். மணியம்மையை பார்த்தார்.. கூட்டிகிட்டுப் போய்ட்டார்.. அவர் தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் தனக்குப் பிறந்த அந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா அவர்கள் இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை விட்டார். கழகத்தில் இருந்து வெளியேறினார். திமுக உருவானது. ஆக, வேலூரில் இருக்கிற மணியம்மை இல்லாவிட்டால், பெரியார் அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது. ஆக, திமுக வந்ததற்கே எங்க மாவட்டம்தான் காரணம் (கூட்டம் ஆப்பரிக்கிறது.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் முகத்தில் புன்னகை) என தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு, திராவிடர் கழகத்தினரை அதிருப்தி அடையச் செய்ததாக சிலர் செய்தி பரப்பி இருந்தனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், வேலூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் மணியம்மை திருமணம் குறித்து பேசும் போது பயன்படுத்திய வார்த்தைகள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். பெரியார் கொள்கைகளில் நான் எவ்வளவு பிடிப்பு உள்ளவன் என்பதை கி.வீரமணி நன்கு அறிவார் என தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications