நான் அந்த ஆஃப் பாயிலை சொல்லவில்லை.. தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. மா சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஆஃப் பாயில் சாப்பிடக்கூடாது என முதலில் அமைச்சர் மா சுப்பிரமணியன் சொல்லியிருந்த நிலையில் தற்போது நான் சிக்கனை தான் ஆஃப் பாயிலாக சாப்பிடக்கூடாது என்று சொன்னேன் எனவும் முட்டையை நான் சொல்லவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென காகங்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. தொடர்ந்து காகங்கள் உயிரிழந்து வந்த நிலையில் இறந்த காகங்களை சேகரித்து மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்தது.

பறவை காய்ச்சல் பாதிப்பு
இந்த ஆய்வின் முடிவில் காகங்கள் பறவை காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது. அதாவது காகங்களுக்கு ஹெச்5என்1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து பறவை காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், இறந்த காகங்கள், கோழி, பறவைகளை தொடக்கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, தலைமை செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும் விளக்கம் அளித்து இருந்தார். அப்போது அவர் ஆஃப் பாயில் சாப்பிடக்கூடாது என்று கூறியதாக தகவல்கள் பரவின. இதனால் முட்டை பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மா சுப்பிரமணியன் விளக்கம்
இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- பறவை காய்ச்சல் பரவி வருகிறது. அதற்காக பெரிய அளவில் பதற்றப்பட வேண்டாம். பறவைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மனிதர்களை தொற்றாது. மனிதர்களுக்கு ஏற்படாது. இதுவரை மனிதர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை.
பறவை காய்ச்சலால் ஒரு பறவையோ, கோழியோ இறந்துவிட்டால் அந்த கோழியை உணவுக்கு பயன்படுத்திவிடக்கூடாது. அவற்றை மண்ணுக்குள் நன்றாக புதைத்து விட வேண்டும். பறந்து வந்த காகம் பறவை காய்ச்சலால் உயிரிழந்துவிட்டால் அதனை அப்படியே குப்பைத் தொட்டியில் கொண்டு போய் போடாமல் குழி தோண்டி புதைத்துவிட வேண்டும்.
வேகாத சிக்கனை தான் அப்படி சொன்னேன்
கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் யாராக இருந்தாலும், நான் உள்பட நன்றாக புல் பாயில் சிக்கனை தான் சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் சிக்கனை சாப்பிடக் கூடாது என்று தான் நான் சொன்னேன். ஆனால் அதற்குள் அமைச்சர் ஆஃப் பாயில் சாப்பிடக்கூடாது என முட்டையை போட்டு வைத்து இருக்கிறார்கள்.
பாதி வெந்த, அரைகுறையாக வெந்த சிக்கனை சாப்பிடாதீர்கள் என்று சொன்னேன்.. முழுமையாக அவிந்த சிக்கனை சாப்பிட வேண்டும் என்று சொன்னேன்.. எல்லாரும் ஆஃப் பாயில் என்றாலே முட்டையை நினைத்து வைத்துள்ளனர். சிக்கனை ஆஃப் பாயிலாக அதாவது அரை குறையாக வெந்த சிக்கனை சாப்பிடக்கூடாது என்று தான் நான் கூறினேன்.. இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் முதலில் பேசியது
முன்னதாக அவர் பேசியபோது, "பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென்று இறந்தால், அதனை பார்ப்பவர்கள் கையால் தொடக்கூடாது. உடனடியாக ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று இதுவரை ஏற்படவில்லை" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications