'சர்வாதிகாரம் தமிழகத்தில் நடக்காது..முதல்வர் ஸ்டாலின் விட மாட்டார்'.. பாஜகவை கடுமையாக சாடிய அமைச்சர்
சென்னை: சமூக நீதி மற்றும் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்து வருவதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து வருவதாக அவர் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பாஜக வைக்கும் குற்றச்சாட்டு
விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படடு வருகிறது.

சக மாணவிகள் மறுப்பு
இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் மாணவியின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவியை யாரும் மதமாற்றம் செய்யும்படி கட்டாயபடுத்தவில்லை என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தது. ''எங்களை யாரும் மதமாற்றம் செய்யும்படி கட்டாயபடுத்தியதில்லை'' என்று பள்ளியில் படிக்கும் மாணவிகளும் கூறினார்கள்.

திமுக-பாஜக வார்த்தைபோர்
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே வார்த்தைபோர் நடந்து வருகிறது. மாணவி இறப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நடடிக்கை சரியில்லை என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரி வருகிறார். தமிழகத்தில் பாஜக மதபிரச்சினையை தூண்ட நினைப்பதாகவும் அவர்ளின் கனவு ஒருபோதும் நடக்காது என்றும் தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாகூரில் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மதமாற்ற சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறினார்.
Recommended Video

ஸ்டாலின் துணிந்து நிற்கிறார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழகத்தில் மத பிரச்சினையை உருவாக்கும் சிலரின் வேலை இங்கு நடக்காது. சர்வாதிகாரத்தை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் துணிந்து நிற்கிறார். சமூக நீதி மற்றும் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார்' என்று தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications