தமிழக அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை: தமிழக அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கூடி வருகிறது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவுக்கு முதல் எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.

திமுகவின் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்த போது உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதேபோல் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி. அன்பழகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது 4-வது அமைச்சராக நிலோபர் கபீலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். முன்னதாக ஆம்பூரில் நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications