ஆளுநர் vs அரசு..முற்றும் மோதல்.. மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் பொன்முடி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்கு புறம்பான வகையில் பேசி அரசுக்கு களங்கம் கற்பிக்க முயல்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஆர்.என். ரவி தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்தே அவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. தமிழகம் என்று கூறியது தொடங்கி சுதந்திர போராட்ட வீரர்கள் வரை அவர் பேசிய கருத்துக்கள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவுசெய்திருக்கிறது. அதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கையெழுத்திட மறுத்த ஆர்.என்.ரவிக்குக் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டமளிக்கும் ஒப்புதலில் கையெழுத்திட மறுத்துள்ள தமிழக ஆளுநர் அவர்கள் தனது முடிவை மறுபரிசிலனை செய்ய வேண்டுமென ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் பொன்முடி, சுதந்திர போராட்ட தியாகி, சங்கரய்யா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து புறக்கணிப்பதாக கூறினார். தினமும் பொய் சொல்வதையே ஆளுநர் ஆர்.என். ரவி தொழிலாக கொண்டிருக்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவது தெளிவாக தெரிகிறது என்றும் பொன்முடி தெரிவித்தார்.
உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை கூறுகிறார். திமுக ஆட்சி மீது களங்கத்தை கற்பிக்க வேண்டும் என்றுதான் ஆளுநர் பேசி வருகிறார்.
தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டு வந்த பிறகு ஆளுநர் ரவி தனது கருத்துக்களை பேசலாம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எங்களை பேச விடுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு விருந்தினர்கள்தான் பேசி வருகின்றனர் என்றும் பொன்முடி தெரிவித்தார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் சங்கரய்யா. அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்து போட மறுக்கிறார் ஆளுநர் ரவி.வேந்தர் என்கிற அதிகாரத்தில் செயல்படுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் என்ற முறையில் நான் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் இதே போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் எல். முருகன் அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி. இந்த ஆண்டு சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் தராததைக் கண்டித்து காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications