மயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல்
சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை: 6 நாள் ஆகியும் இன்னும் சின்னதம்பியை பிடிக்க முடியவில்லை. அதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சி மேற்கொள்ள போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னதம்பி முகாமிட்டுள்ளான். அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வருகிறான்.
சின்னதம்பியை பிடிக்க 2 கும்கிகளை அனுப்பினால் ஒன்றும் வேலைக்காகவில்லை. கூடவே விளையாடி, சாப்பிட்டு, கொஞ்சியதுதான் மிச்சம்.

தொடர்ந்து கண்காணிப்பு
கோர்ட்டும் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டது. எனினும் சின்னதம்பியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்டோர் சின்னதம்பியின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில், உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். யானை முகாமிட்ட இடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து சின்னத்தம்பி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பேசி வருகிறார்.

மயக்க ஊசி
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "சின்னத்தம்பி யானையை பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி போட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறை அனுமதி கேட்டுள்ளோம் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம்" என்றார்.

சமவெளிக்கு வரும்
தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி, யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து இன்று ஆய்வு செய்தார். அப்போது சின்னதம்பி திரும்பவும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்றும், காட்டுக்குள் விட்டாலும் திரும்பவும் சமவெளிப்பகுதிக்கே வந்துவிடும் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் மயக்க ஊசி போட்டு சின்னதம்பியை பிடித்து கொண்டு போய் வனத்தில் விட்டால் என்ன ஆகும் என தெரியவில்லை. எனினும், இதுவரை மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் தராமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் சின்னதம்பிக்கு மறுபடியும் மயக்க ஊசியா என்று பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications