தமிழ்நாட்டில் கோவில்கள் திறப்பு குறித்த அறிவிப்பு வருமா?.. அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கோவில்கள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:- இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் இன்று தொடங்கி உள்ளோம்.

வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி.

முதல்வர் அறிவிப்பார்

முதல்வர் அறிவிப்பார்

அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தையும்15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

சுலபம் இல்லை

சுலபம் இல்லை

கோவில்களில் பக்கதர்கள் வருவதற்கு தான் அனுமதி வழங்கவில்லை. பூசாரிகள் தினசரி பூஜை செய்து தான் வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை.

விரைவில் நல்ல அறிவிப்பு

விரைவில் நல்ல அறிவிப்பு

கோவிலில் நகை, சிலை திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுதொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இது தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 28-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் ஏற்கனவே 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. இதே போல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. எனவே தமிழ்நாட்டில் கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுமார் 12,000 தினசரி பாதிப்புகளை கொண்டிருக்கும் கேரளாவில் கோவில்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே 7,000-க்கு கீழே கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள தமிழ்நாட்டிலும் கோவில்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+