For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் டெல்டா + கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்டா + கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி

Recommended Video

    Coronavirus பற்றி தொடர் ஆராய்ச்சி... Wuhan Lab-க்கு நாட்டின் உயரிய விருது வழங்கும் China?

    இந்தியாவில் டெல்டா வகை கொரோனா காரணமாக இரண்டாம் அலை ஏற்பட்டது. மிகவும் வேகமாக பரவ கூடிய, அதிக மரணங்களை ஏற்படுத்த கூடிய டெல்டா வகை கொரோனா காரணமாக இந்தியா பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்தது.

    இந்த நிலையில் இரண்டாம் அலை உச்சத்தை கடந்த நிலையில் இரண்டு வாரங்களாக கேஸ்கள் குறைந்து வந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

    வெறும் 10 நொடிகள்,சடசடவென சரிந்த 12 மாடி கட்டிடம்.. அதிபர் உறவினர் மாயம்..என்ன நடந்தது? வீடியோ வைரல்வெறும் 10 நொடிகள்,சடசடவென சரிந்த 12 மாடி கட்டிடம்.. அதிபர் உறவினர் மாயம்..என்ன நடந்தது? வீடியோ வைரல்

    டெல்டா +

    டெல்டா +

    இந்தியாவில் தற்போது டெல்டா + கேஸ்கள் பரவ தொடங்கி உள்ளதால் இதனால் கேஸ்கள் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. டெல்டா + வகை கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் டெல்டா + வகை கொரோனாவிற்கு இம்யூன் எஸ்கேப் குணம் உள்ளது. இதனால் உடலில் கொரோனா எதிர்ப்பு திறன் உள்ளவர்களுக்கும் கூட டெல்டா + தாக்கும் வாய்ப்புள்ளது.

     மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசம்

    இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா + கொரோனா பரவி உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே ஒருவர் டெல்டா + கொரோனா காரணமாக பலியானார். இந்த நிலையில் இன்று இன்னொரு நபரும் டெல்டா + வகை கொரோனா காரணமாக பலியானார்.

    இரண்டு

    இரண்டு

    மத்திய பிரதேசத்தில் பலியான இரண்டு பேருமே வேக்சின் போடாதவர்கள். ஆனால் அங்கு 7 பேருக்கு டெல்டா + கொரோனா வந்துள்ளது. இதில் பலியான 2 பேர் போக மீதமுள்ள 5 பேரில் 3 பேர் வேக்சின் எடுத்துக்கொண்டவர்கள். இந்த 3 பேரும் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் வேக்சின் எடுத்தவர்கள். ஆனாலும் இவர்களுக்கு டெல்டா + கொரோனா வந்துள்ளது.

    கொரோனா

    கொரோனா

    இவர்களுக்கு பெரிய அறிகுறி இல்லாமல் டெல்டா + கொரோனா வந்துள்ளது. இது போக இன்னும் இரண்டு பேருக்கு டெல்டா + வந்துள்ளது. அவர்களுக்கும் பெரிய அளவில் அறிகுறி இல்லை. அதில் ஒருவர் 22 வயது பெண், இன்னொருவர் 2 வயது குழந்தை.

    குழந்தை

    குழந்தை


    குழந்தைகள், வேக்சின் போட்டவர்களுக்கு டெல்டா + கொரோனா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் போபால், உஜ்ஜைன், ரைசன், அசோக் நகர் ஆகிய மாவட்டங்களில் டெல்டா + கொரோனா பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இதனால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் தீவிரம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Delta + Coronavirus kills 2 people in Madhya Pradesh: 3 vaccinated people tested positive in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X