இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!
சென்னை: உலகளாவிய வர்த்தகச் சந்தையில் பொருளாதார மந்தநிலைகளும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல்களும் ஒரு மிகப்பெரிய வர்த்தக பாதிப்பை கடந்த 2-3 வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ் (Infosys), காக்னிசண்ட் (Cognizant), ஹெச்சிஎல் டெக் (HCLTech) மற்றும் ஹெக்சாவேர் (Hexaware Technologies) ஆகியவை நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய திறன் மையங்கள் அதாவது GCC எனப்படும் Global Capability Centres மூலம் தங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராகி வருகின்றன.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது ஒரு முக்கிய உத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஏஜென்டிக் AI தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், GCC துறையில் தீவிரமாக முதலீடு செய்து வருகின்றன. இந்த உலகளாவிய தேவையை மனதில் கொண்டு, இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த மெகா வாய்ப்பை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
புதிய கூட்டணி முறை
இன்ஃபோசிஸ், காக்னிசண்ட், ஹெச்சிஎல் டெக், ஹெக்ஸ்வேர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டில் பிரத்யேகமாக 'ஜிசிசி வணிகப் பிரிவுகளை' (Dedicated GCC Business Units) பிரித்து அமைத்தது. இதன் மூலம் ஜிசிசி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது மட்டும் அல்லாமல் சேவைகளையும் வழங்க துவங்கியுள்ளது.
முன்பெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) இந்தியாவில் தங்களின் சொந்த அலுவலகக் கிளைகளை அமைக்கும் போது, அவர்களுக்குத் தேவையான ஊழியர்களை வழங்குவது, ஆலோசனைகளை வழங்குவது மற்றும் சிறிய சப்போர்ட் பணிகளைச் செய்வது மட்டுமே இந்திய ஐடி நிறுவனங்களின் வேலையாக இருந்தது.
ஆனால், தற்போது இந்தத் பாரம்பரிய வர்த்தக மாடல் முற்றிலும் மாறிவிட்டது. தற்போது பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய ஐடி நிறுவனங்களும் இணைந்து, மனிதர்களின் தலையீடே இன்றிச் சுயமாக முடிவெடுக்கும் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) மென்பொருட்களையும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளையும் கூட்டாக உருவாக்கும் (Co-develop) புதிய பார்ட்னர்ஷிப் மாடலுக்கு மாறியுள்ளன.
ஹெச்சிஎல் டெக்
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் எவர்நார்த் ஹெல்த் சர்வீசஸ் (Evernorth Health Services), வெஸ்டர்ன் யூனியன் (Western Union), ஆப்டம் (Optum) உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச ஜிசிசி வாடிக்கையாளர்களைத் தற்போது தன்வசம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காக்னிசண்ட்
காக்னிசண்ட் நிறுவனத்தின் ஜிசிசி சேவைப் பிரிவின் உலகளாவிய தலைவர் சைலஜா ஜோசுலா கூறுகையில், ஜிசிசி சார்ந்த வர்த்தகம் தற்போது எங்களுடைய Large-deal பேச்சுவார்த்தைகளில் ஒரு மிக முக்கியப் பகுதியாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
இன்போசிஸ்
இன்போசிஸ் ஏஐ ஏஜென்டிக் ஃபவுண்டரி (Infosys AI Agentic Foundry) மற்றும் இன்போசிஸ் டோபாஸ் (Infosys Topaz) ஆகிய தளங்கள் மூலம் உலகளாவிய நிறுவனங்களுக்குப் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கி வருகிறது.
லுஃப்தான்சா சிஸ்டம்ஸ் (Lufthansa Systems), ஜூபிளஸ் (zooplus), டான்ஸ்கே பேங்க் (Danske Bank) போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்காக இந்தியாவில் ஜிசிசி-க்களை அமைத்து நிர்வகிப்பது உட்பட, பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை இன்போசிஸ் தற்போது மேற்கொண்டுள்ளது.
ஹெக்சாவேர்
ஹெக்சாவேர் (Hexaware) நிறுவனமும் இந்த ஜிசிசி பிரிவின் மீது தங்களின் ஒற்றை இலக்கு கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே சுமார் 35 ஜிசிசி-க்களை வெற்றிகரமாக உருவாக்கி இயக்கியுள்ளது, அவற்றில் 15 மையங்கள் தற்போது அவற்றின் தாய் நிறுவனங்களிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்
பொதுவாக, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் சொந்த ஜிசிசி-க்களை அமைக்கும் போது, அனைத்து ஊழியர்களையும் தங்களின் சொந்த நிறுவனத்தின் மூலமாகவே நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்ற ஒரு தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், புதிய மற்றும் சிறிய அளவில் தொடங்கப்படும் ஜிசிசி மையங்கள் தங்களின் தொழில்நுட்பப் பணிகளுக்காக 40 முதல் 70 சதவீதம் வரை இந்திய ஐடி நிறுவனங்களின் ஊழியர்களைத் தான் (Outsource) நம்பியுள்ளன.
அதேபோல், பெரிய ஜிசிசி நிறுவனங்களும் கூட தங்களின் சிறப்புத் திட்டங்களுக்காக 15 முதல் 30 சதவீத ஊழியர்களை இந்திய ஐடி நிறுவனங்களிடம் இருந்துதான் ஒப்பந்த அடிப்படையில் பெற்று வருகின்றன.
நாஸ்காம் தரவுகள்
நாஸ்காம் (Nasscom) அமைப்பின் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது மொத்தம் 2,117 உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) மிக வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இவை ஒட்டுமொத்தமாக 98.4 பில்லியன் டாலர் (சுமார் 8.2 லட்சம் கோடி ரூபாய்) வருவாயை ஈட்டுவதோடு, இந்தியாவில் உள்ள சுமார் 2.36 மில்லியன் (23.6 லட்சம்) ஐடி பட்டதாரி இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications