எ.வ.வேலுவை விரட்டும் விஜய்! உச்சநீதிமன்றத்திற்கே சென்ற தவெக அரசு! லுக்-அவுட் நோட்டீஸ் என்னாகும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

வழக்கை அவசரமாக நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதற்கு தலைமை நீதிபதி சூரியகாந்தி மறுப்பு தெரிவித்து நாளை மறுநாள் விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

ev velu tamil nadu

2022 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே அவருக்கு எதிராக காவல் துறை பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறை பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக எ.வ.வேலுவுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவசர வழக்காக நாளையே விசாரிக்க தமிழக அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு மறுத்த நீதிபதி, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் சென்னை வந்தார் எ.வ.வேலு. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நான் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதய பிரச்சினை, ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.

அப்போது சிகிச்சைகளை முடித்தவுடன் இரண்டாவது முறையாக 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மீண்டும் உடல்நல பரிசோதனைக்கு சென்றேன். பிறகு மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல முயன்ற போது சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்த பிஸியாக போகவில்லை.

அதனால் தற்போது சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு ஒவ்வாமைக்கு 3 நாட்களக்கு ஒரு முறை என 9 நாட்களுக்கு 3 ஊசி போட்டார்கள். என்னை 5ஆம் தேதி ஆஜராக சொன்னதுமே நான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எனது வழக்கறிஞர் மூலம் கடிதம் எழுதினேன். அதில் நான் சிகிச்சைக்கு வந்ததும் குறித்தும் 12 ஆம் தேதிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் ஆஜராவேன் என்றும் தெரிவித்திருந்தேன்.

ஆனால் மீண்டும் 9ஆம் தேதி ஆஜராகுமாறு கடிதம் அனுப்பியிருந்தார்கள். நானும் மீண்டும் அவர்களுக்கு விளக்கம் அளித்தேன். தற்போது 15 ஆம் தேதி நிச்சயம் ஆஜராவேன். எனவே எதற்கு ஓடி ஒளியும் இயக்கம் திமுக இல்லை. என்னை முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஸ்டாலினும் அப்படி வளர்க்கவில்லை. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. சிங்கப்பூரில் சிகிச்சைக்காக இருந்தேன். நான் 10 ஆண்டுகளாக அந்த சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+