அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர்.. 3.5 மணி நேரத்தில் 5.63 லட்சம் பேர்! அடுத்த விஜய் மொமென்ட்?

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து புதிய திருப்பத்தைக் கண்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளார்.

"நாம் தலைவர்கள்" (We the Leader) என்ற புதிய சமூக - அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்தத் திடீர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து இதற்குப் பிரம்மாண்ட ஆதரவு குவியத் தொடங்கியுள்ளது.

Annamalai BJP RSS Annamalai We The Leader Annamalai New Political Movement We The Leader Tamil Nadu Annamalai 5 63 Lakh Members K Annamalai Political Launch Tamil Nadu New Party 2026 Annamalai BJP Resignation 2029 Tamil Nadu Elections Annamalai Political Comeback Tamil Nadu Politics New Wave 5 63 2029 Annamalai New Movement We The Leader Tamil Nadu Politics Annamalai 2026 2029 Elections Tamil Nadu 2029

3.5 மணிநேரத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்த சாதனை

பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுத்த ராஜினாமாவை அக்கட்சியின் தேசியத் தலைமை முறைப்படி ஏற்றுக் கொண்ட சில நிமிடங்களிலேயே, அவர் தனது புதிய இயக்கத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.

வாரிசு அரசியல் மற்றும் தனிநபர் வழிபாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புதிய இயக்கத்தில் இணையுமாறு அவர் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அண்ணாமலை இயக்கத்தை அறிவித்து மக்களை இணைய அழைப்பு விடுத்த அடுத்த மூன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே, இந்த புதிய 'லீடர்' இயக்கத்தில் சுமார் 5.63 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் ஒரு புதிய இயக்கத்திற்கு இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, நிமிடத்திற்குச் சராசரியாக 35 பேர் என்ற வேகத்தில் மக்கள் தொடர்ந்து தங்களை இந்த புதிய இயக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

கோவையில் அமையும் புதிய தலைமையகம்

அண்ணாமலையின் இந்த புதிய இயக்கம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம் (APJ Abdul Kalam Centre for Ethics and Politics) இந்த புதிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் (Technocrats) மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் எனப் பலதரப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் பண்பாட்டைத் தமிழ்நாட்டில் உருவாக்கவே இத்தகைய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த மையத்தில் முறையாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய கட்சிகள் அசுர வளர்ச்சி பெற்று வரும் வேளையில், அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தின் வருகை மற்றும் அதற்குத் தற்போது கிடைத்துள்ள இந்த 5 லட்சம் மக்களின் ஆதரவு, வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+