அதிமுக அவுட்.. வேற லெவலில் இறங்கி அடிக்கும் வேலுமணி! எடப்பாடிக்கு எதிராக பக்கா பிளான்! பின்னணியில் பாஜக?
சென்னை: அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், பாஜக ஆதரவுடன் அதிமுகவில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களை திரட்டி தவெகவுக்கு ஆதரவளிக்க காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு கரூர் சென்று இருக்கிறார் முதல்வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்.

நேற்றைய கூட்டத்தில் விஜயின் பேச்சு வரவேற்பையும் விமர்சனத்தையும் கலவையாக பெற்றிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க திமுகவை வழக்கம் போல் மிகக் கடுமையாக விமர்சித்த விஜய், ஒரு சில இடங்களில் மட்டும் தீர்ந்து போன சக்தி என அதிமுகவை மறைமுகமாகவே விமர்சித்தார்.
இந்த நிலையில் விஜய் அதிமுக நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதும், அவர்களது ஆதரவை பெற காய்களை நகர்த்தி வருவதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அதிமுகவில் தேர்தல் முடிவடைந்த உடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒரு குரூப் கிளம்பியது. அதாவது திமுக ஆட்சியை இழந்துவிட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுக
இதனால் அதிருப்தி அடைந்தவர்கள் தனியாக ஆலோசனை நடத்தியதோடு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது தகுதிமிக்க நடவடிக்கை எடுக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகர் தரப்பை அணுகியது. இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
எஸ்பி வேலுமணி
அதே நேரத்தில் போர்க்கொடி தூக்கிய சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் தரப்பு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக கொங்கு மண்டலத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன. அதாவது பதவியை தற்போது ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இடைத்தேர்தலில் நின்று வெல்வது சில தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அது ரிஸ்க் என நினைக்கும் அவர்கள் அதிருப்தி எம்எல்ஏக்களாகவே தொடர்வோம் என முடிவு செய்துள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் பாஜக ஆதரவோடு ஒரு திட்டத்தை வேலுமணி தரப்பு தீட்டி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் 47 எம்எல்ஏக்களில் 22 பேர் எஸ் பி வேலுமணி தரப்புக்கும், 25 பேர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் ஆதரவாக இருந்தனர். அதில் ஐந்து பேர் தற்போது ராஜினாமா செய்து விட்ட நிலையில் தற்போதைக்கு 15 முதல் 17 எம்எல்ஏக்களின் ஆதரவு எஸ்பி வேலுமணி தரப்புக்கு இருக்கிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்களில் ஒரு சிலரிடம் எஸ் பி வேலுமணி தரப்பு பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
பாஜக ஆதரவு
மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 42 ஆக உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு என்றால் 28 அல்லது 29 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் நேரடியாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடியும். இதை அடுத்து பாஜக ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் எம்எல்ஏக்கள் உடன் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி தரப்பு பேசி வருகிறது என்கின்றனர். இதனை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக சொல்கின்றார்.












Click it and Unblock the Notifications