கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் தி.மு.கவின் மூத்த தலைவருமான கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வேலைக்காகப் பணம்' (Cash for Jobs) முறைகேட்டில் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம், தி.மு.கவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

KN Nehru Faces DVAC Case

சென்னைய உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று அளித்துள்ள முக்கியத் தகவலில், நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு முறைகேடு (Cash for Jobs) புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) முறைப்படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அமலாக்கத்துறை (ED) திரட்டித் தந்த பணமோசடி மற்றும் லஞ்சப் பரிமாற்றம் தொடர்பான வலுவான ஆதார ஆவணங்களின் அடிப்படையில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக அரசியல் மற்றும் சட்டப் போராட்டமாக நீடித்து வந்த இந்த விவகாரத்தில், தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சியில் ஆக்சன்

திமுக ஆட்சியில் வழக்கு பதியப்படாத நிலையில் தற்போது தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குச் செல்கிறது. மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை (ED) நகராட்சி துறையில் வேலைக்கு பணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தபோது, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

அப்போது, நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ரகசிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 27, 2025 அன்று அமலாக்கத்துறை 232 பக்கங்கள் கொண்ட விரிவான 'டாசியர்' (Dossier) ஒன்றை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பி வைத்தது. பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) பிரிவு 66(2)ன் கீழ் இந்த முக்கியமான தகவல்கள் மாநில அரசுடன் பகிரப்பட்டன. இந்த ஆவணங்களில், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், நகரமைப்பு அதிகாரி உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்புவதில் பெரும் அளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, ஒரு பணியிடத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தேர்வுக்கு முன்பே, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் சிக்கியுள்ளன. மொத்த ஊழல் மதிப்பு சுமார் ரூ.634 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இதோடு தொடர்புடைய ஒப்பந்த முறைகேடுகளையும் சேர்த்து மொத்த ஊழல் மதிப்பு இன்னும் அதிகம் எனக் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பத்துரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக DVAC வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த பிப்ரவரி 20, 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு அதிரடித் தீர்ப்பளித்தது.

அமலாக்கத்துறை வழங்கிய 232 பக்க ஆவணங்களில் 'பிரைமா ஃபேசி' (Prima Facie) குற்றம் நடந்திருப்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக நீதிபதிகள் கூறினர். "மத்திய புலனாய்வு அமைப்பு இவ்வளவு விரிவான ஆதாரங்களை வழங்கிய பின்னரும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை காலம் தாழ்த்தக் கூடாது" எனக் கடுமையாக சாடிய நீதிமன்றம், DVAC-வை உடனடியாக (Forthwith) வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குப் பின்னர் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. ஏப்ரல் 2026-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மத்திய அமைப்புகளின் ஒவ்வொரு தகவலுக்கும் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், இது மாநிலத்தின் தன்னாட்சி உரிமையில் தலையீடு என்றும் வாதிடப்பட்டது. இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தலைமையிலான அரசு மேற்கொண்டு இருக்கும் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆகும் இது. அருண் ஐபிஎஸ் இந்த பொறுப்பிற்கு வந்த பின் எடுக்கப்பட்டு உள்ள முதல் நடவடிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+