பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!
கோவை: பாஜகவில் இருந்து கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் விலகியுள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவர். அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் பாஜகவில் இருந்து அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.
அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாகிறது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். கண்டிப்பாக அடுத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் பொதுத்தேர்தலில் நம் கட்சி போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். தனது கட்சியில் இணைவதற்கான ஆன்லைன் லிங்கையும் வெளியிட்டார் அண்ணாமலை.

இதைத்தொடர்ந்து, பலரும் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அண்ணாமலை, அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் 5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பாஜகவில் செயல்பட்டு வந்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், இருந்து கோவை தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவர். அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் பாஜகவில் இருந்து விலகிய அவர் அண்ணாமலை உடன் இணைந்து பயணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
வசந்தராஜன் எழுதியுள்ள கடிதத்தில், "கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். 1998ல் கிளை தலைவராக பாஜகவில் ஆரம்பித்து படிப்படியாக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர், மாவட்ட தலைவர், பாராளுமன்ற வேட்பாளர் வரை இந்த சாமானியனை உயர்த்தியது இந்த ஒப்பற்ற பாரதிய ஜனதா கட்சி.
அன்று முதல் இன்று வரை பூத் ஏஜென்ட், கவுண்டிங் ஏஜென்ட் வீடுதோறும் பிரச்சாரம், போராட்டம், பொதுக்கூட்டம், மக்கள் நல நிகழ்ச்சிகள், 6 மாதம் முழு நேர ஊழியர், 13 பிணையில்லா வழக்குகள், தாமரை வரைதல், கொடி கட்டுதல், சுவரொட்டி ஒட்டுவது என்று தாமரையுடன் இருபத்தி எட்டு ஆண்டுகள் வாழ்த்திருக்கிறேன்.
இந்திய திருநாட்டை காங்கிரசின் மிக மோசமான மன்னர் ஆட்சியில் இருந்து மீட்டு தேச பாதுகாப்பு உலக மத்தியில் இந்தியாவின் மரியாதை உயர்வு தூய்மையான வளர்ச்சியான நல்லாட்சி கொடுத்த பாரதிய ஜனதா கட்சியும் வாஜ்பாய், அத்வானி மோடி போன்ற மாமனிதர்களின் தலைமையில் ஆண்டுகள் பயணம் செய்தது எனது பூர்வ ஜென்ம புண்ணியம்.
மிக மோசமான தோல்வி காலத்திலும் பாரதிய ஜனதா கட்சிக்காரன் என்று பெருமையுடன் பயணித்து வந்தேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத போதைக்கு அடிமை சினிமாவுக்கு அடிமை, குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டு தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய சமுதாய பயணம். ஆனால் தற்போதைய தமிழக பாஜக சூழ்நிலையில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்து இருக்கிறேன். யாரையும் குறை கூறாமல் கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கட்சியில் உள்ள அனைவரையும் மிக முக்கிய தலைவர்கள் மரியாதை உடன் நடத்த வேண்டும் என்பது எனது ஆவல்.
இத்தனை ஆண்டுகள் என்னுடன் பயணித்த எனது உறவுகளுக்கு நன்றியைத் தெரிவித்து மிக கனத்த இதயத்துடன் நான் உயிரிலும் மேலாக நேசித்த பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன் கொண்ட தேசிய சிந்தனை கொண்ட ஊழலற்ற நேர்மையான பிரம்மாண்ட வளர்ச்சி தரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பாதையில் அண்ணாமலை அண்ணனுடன் கோர்த்து பயணிக்க எனது அரசியல் நண்பர்களுடன் இணைந்து முடிவு எடுத்திருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் வேதசுப்பிரமணியமும், பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்தவர் வேதசுப்பிரமணியம். 1998ல், பாஜகவில் இணைந்த இவர், 28 ஆண்டுகளாக, அக்கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றினார். பின்னர் தாம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அதற்கான கடிதத்தை மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பியுள்ளார். அவர் அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications