பாட்டாவே பாடிட்டாரே! அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா? கீழடி சிற்பம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: சிவகங்கை கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் அழகிய சுடுமண் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பெருமிதத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன? அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா? என நெகிழ்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் (மதுரையில் இருந்து 15 கி.மீ) தமிழக தொல்லியல் துறை சார்பில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்ற்ரன. தொல்லியல் துறை இணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் 5 குழிகள் தோண்டப்பட்டன. அதில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கூரை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. சரிந்த நிலையிலான கூரை ஓடுகள், கீழடியில் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன.
பொதுவாக கீழடியில் மணிகள், தாயங்கள், விளையாட்டு சில்லுகள் என மக்கள் அதிகம் பயன்படுத்திய பொருட்களே கிடைத்திருக்கின்றன. ஆகையால் கீழடி ஒரு பெருநகரமாக, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கு9ம் நகரமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
முன்னதாக 4 முதல் 7 வரையிலான அகழாய்வுப் பணிகளில் மொத்தம் 18,000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில்தான் கீழடி 8-ம் அகழாய்வில் மிக அழகிய நேர்த்தியா சுடுமண் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு,
மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?
அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?"
கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications