பண்ருட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால் அமைச்சர்கள் கால்வைக்க முடியாது- மிரட்டும் வேல்முருகன்
சென்னை: தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பண்ருட்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால் திமுக அமைச்சர்கள் தொகுதிக்குள் கால் வைக்கவே முடியாது; மக்கள் விரட்டியடிப்பார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னர் பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்; அதேபோன்ற நிலைமைதான் பண்ருட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் உருவாகும், என்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானவர் வேல்முருகன். ஆனால் கடந்த சில வாரங்களாக ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் வேல்முருகன். தமிழ்நாடு சட்டசபையிலேயே அரசை பகிரங்கமாக விமர்சித்தார் வேல்முருகன். இது சபைக் குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.

மேலும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ2,000 நிவரணத் தொகையை அரசு அறிவித்ததையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் வேல்முருகன். சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ6,000 தருகிற அரசு ஏன் கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களை வஞ்சிக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார் வேல்முருகன்.
இந்த நிலையில் வேல்முருகன் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. திமுக அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்வார் எனவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் பண்ருட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்; அந்த தேர்தலின் போது பண்ருட்டி தொகுதிக்குள் எந்த அமைச்சரும் நுழைய முடியாது. முன்னர் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடித்தனர் அதேபோல பண்ருட்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால் அங்கேயும் அமைச்சர்களை மக்கள் விரட்டியடிப்பர்; தொகுதிக்கு ஒரு கல்லூரிக்கு கூட அனுமதி தராத அரசை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றார் வேல்முருகன்.
-
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications