சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10-ம் வகுப்பு தேர்வு ரத்து- எடப்பாடியார் அறிவிப்புக்கு செம வரவேற்பு- ஆன்லைன் வகுப்புக்கு தடை வரும்?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு

    இந்தியாவில் கொரோன மிகவும் அதிகம் பாதித்து கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

    குறிப்பாக சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    புதுவையிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்புபுதுவையிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பு

    தமிழக முதல்வர் ஆலோசனை

    தமிழக முதல்வர் ஆலோசனை

    பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக போராட்ட அறிவிப்பையும் கூட வெளியிட்டன. இருப்பினும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாகவே பல்வேறு சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்தது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

    தெலுங்கானாவில் தடாலடி

    தெலுங்கானாவில் தடாலடி

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்தது. இதனை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாகவும் தமிழக அரசுபரிசீலித்து வந்தது. இதனையடுத்து இன்று தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகத்தான அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்பு

    எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்பு

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் 11-ம் வகுப்புக்கும் விடுபட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். 12-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்துக்கான தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றதாகவும் காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80%; வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20% மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

    எதிர்க்கட்சி விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி

    எதிர்க்கட்சி விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி

    முதல்வர் எடப்பாடியாரின் இந்த மிகப் பெரிய அறிவிப்பு பல்லாயிரக்கணக்கான மாணவர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தங்களது கோரிக்கைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பாராட்டுகளயும் பெற்றோர்கள் தெரிவித்திருக்கின்றனர். சாத்தியமானவற்றை ஆராய்ந்து சரியான தருணத்தில் இம்முடிவை அறிவித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

    ஆன்லைன் வகுப்புக்கும் தடை?

    ஆன்லைன் வகுப்புக்கும் தடை?

    இதேபோல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகிற போக்குக்கும் தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்பதும் பெற்றோர் கோரிக்கை. ஆன்லைன் வகுப்புகள் என்பது நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது; கிராமப்புற மாணவர்களுக்கு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பும், ஆன்ட்ராய்டு மொபைல் போனும் இன்னமும் எட்டாக் கனிதான். ஆகையால் இதனையும் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளையும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    English summary
    Parents happy over the TamilNadu Chief Minsiter Edappadi Palanisamy's announcement on the Cancel of Class 10 th Board exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X