"ஒன்னே ஒன்னு சொல்லணும்".. வாக்கிங் சென்ற முதல்வரை மறித்த பெண்.. "கட்டாயம்" சிரித்து நகர்ந்த ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வரின் நடைப்பயிற்சியின்போது, பொதுமக்கள் இப்படி நேரடியாகவே வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிப்பதும், அவைகளை முதல்வர் பொறுமையாக நின்று கேட்டு பதிலளித்து வருவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Recommended Video

    ஒன்னே ஒன்னு சொல்லணும்.. வாக்கிங் சென்ற முதல்வரை மறித்த பெண்.. கட்டாயம் சிரித்து நகர்ந்த ஸ்டாலின்

    தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் முக்கிய கவனத்தை பெற்று வருகின்றன.. ஒருபக்கம் பணிசுமைகள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பொதுமக்களுடன் நெருங்கி பழகுவதை கடைப்பிடித்து வருகிறார்.

    அதிலும் தினமும் வாக்கிங், ஜாக்கிங் செல்லும் சமயங்களில் பொதுமக்களுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தி கொள்கிறார்.

     செயல்பாடுகள்

    செயல்பாடுகள்

    அந்த வகையில், தினமும் அவர், சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் வாக்கிங் செல்கிறார்.. அந்த சமயம், அங்கு வரும் மக்களுடன் இயல்பாக பேசுகிறார். அதேபோல மக்களும், முதல்வர் என்ற பயம் இல்லாமல், சகஜமாகவே பேசுகிறார்கள்.. அப்படி பேசும்போது, ஆட்சி திறன் குறித்தும், சிறப்பு திட்டங்கள் குறித்தும் நேரடியாகவே பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள்..

    மீடியா

    மீடியா

    தமிழக அரசுக்கு வாழ்த்துக்களையும் சொல்லி கொள்கிறார்கள். இந்த செய்திகள் அத்தனையும் சோஷியல் மீடியாவில் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் வணக்கம் சொன்னார்.. முதல்வரும் அவருக்கு பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

     தடுப்பூசி

    தடுப்பூசி

    பிறகு அந்த நபர், "முன்னாடி மாதிரி இல்லை, கொரோனா தடுப்பூசியை தமிழக மக்கள் 5 கோடி பேருக்கு குறுகிய காலத்தில்.. அதனால்தான் இப்படி எங்களால் தைரியமாக வெளியே வர முடிகிறது.. நிர்வாகமும் சிறப்பாக நடக்கிறது.. அப்படியே அந்த லஞ்சத்தையும் கட்டுப்படுத்திவிட்டால், இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவுக்கு வெளியேயும் நாம் முதலிடத்துக்கு வந்துவிடுவோம்.. அதை யாராலும் தடுக்க முடியாது.. உங்களுடைய உடல்நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்" என்றார்.

     நன்றி - பாராட்டு

    நன்றி - பாராட்டு

    அவர் பேசுவதை முழுக்க அமைதியாக கேட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.. பிறகு, வணக்கமும், நன்றியையும் தெரிவித்துவிட்டு மறுபடியும் வாக்கிங்கை தொடர்ந்தார். அப்போது எதிரே ஒரு பெண் வந்தார்.. முதல்வரை பார்த்ததும் வணக்கம் சொன்னார்.. பிறகு, "உங்களை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கு.. ஒன்னே ஒன்று சொல்லணும். இதே மாதிரி எப்பவும் இருங்க.. உங்கள் சேவை சிறப்பாக இருக்கிறது" என்றார்..

     வணக்கம்

    வணக்கம்

    அதைக்கேட்டு சிரித்த ஸ்டாலின், "சரி, கட்டாயம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் வாக்கிங்கை தொடர்ந்தார்.. ஒவ்வொரு நாளும் முதல்வரின் நடைப்பயிற்சியின்போது, பொதுமக்கள் இப்படி நேரடியாகவே வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிப்பதும், அவைகளை முதல்வர் பொறுமையாக நின்று கேட்டு பதிலளித்து வருவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+