தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்!
சென்னை: தமிழ்நாட்டை சிறு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை காலந்தோறும் எழுந்தாலும் அவை அனைத்தும் நடைமுறைக்கு வராமலே போய்விட்டன.
தமிழகத்தில் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிற கோரிக்கை கொங்குநாடு தனி மாநில கோரிக்கை. முதுபெரும் அரசியல் தலைவர் கோவை. செழியன் இந்த கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்தார்.
அவருக்குப் பிந்தைய கொங்குநாட்டை மையமாக வைத்து செயல்படும் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதைத்தான் அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டனும் இன்றைய அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

வடதமிழ்நாடு தனி மாநில கோரிக்கை
அதேபோல் வடதமிழ்நாடு மாநில கோரிக்கையும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாமகவால் முன்னெடுக்கப்பட்டதுதான் வடதமிழ்நாடு தனி மாநில கோரிக்கை.

தென் தமிழ்நாடு தனிமாநிலம்
நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு மாநிலத்தை பிரிக்கலாம் என்பது பாமகவின் நிலைப்பாடு. 1990களின் இறுதியில் தென் தமிழ்நாடு தனி மாநில கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மருத்துவர் சேதுராமன் இந்த கோரிக்கையை முன்வைத்து இயக்கங்களை நடத்தினார்.

திருச்சிக்கு தலைநகர் மாற்றம்
இந்த கோரிக்கைகளுக்கும் முன்னதாக தமிழ்நாட்டின் தலைநகரை மாற்ற வேண்டும் என்கிற ஒரு கோரிக்கையும் இருந்தது. தமிழ்நாட்டு தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பதில் தந்தை பெரியார் தீவிரமாக இருந்தார். அதற்கு முன்னோடியாக தமது செயல்பாடுகளை திருச்சியிலும் இருந்தும் அவர் மேற்கொண்டார்.

தாயக பெருநிலப்பரப்பு
பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது நிறைவேறாமல் போனது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் குமரி முதல் சென்னை வரை கோவை முதல் கும்மிடிப்பூண்டி வரை என்கிற பெருநிலப்பரப்பு ஒட்டுமொத்தமும் தங்களுடையதுதான் என்கிற மனோபாவம் ஆழப் படிந்து இருக்கிறது. இதனால் இயல்பாகவே மாநில பிரிவினைகளுக்கான இயக்கஙள் முழு வீச்சில் களம் காணமுடியாத நிலையே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications