பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. எப்படி பார்க்கலாம்? முழு விவரம்
சென்னை: கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெற்ற பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்கையில் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜூலை 28, 29-ஆம் தேதி (திங்கள், செவ்வாய்) பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 5.275.
புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் நாள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு












Click it and Unblock the Notifications