ஃபுல் போர்ஸில் இறங்கும் தமிழக காவல்துறை.. அவசரகால உதவிக்கு அழைக்கலாம்.. டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்!
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அவசர உதவி எண்கள் 112, 1070, 9445869843, 9445869848 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கியது. முதல் 10 நாட்கள் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திடீரென கடுமையான மழை பெய்தாலோ வெள்ளம் ஏற்பட்டாலோ அதனை எதிர்கொள்ளவும் மக்களைக் காப்பாற்றவும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின் மூலம் 17,305 காவல் ஆளிநர்களுக்கும், 1095 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கும், 793 தன்னார்வலர்களுக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக்கான ADGP Operations அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை 24*7 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மழைப்பொழின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், 24 மணிநேர அவசர உதவி எண்கள்: 112,1070 ஆகியவை செயல்படும். மேலும், 9445869843, 9445869848 ஆகிய எண்களிலும் அவசரகால உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு பேரிடர் மீட்புக் குழுவிலும் 30 பேர் என்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களை அவசர காலத்தில் பாதுகாக்க 18 குழுக்களும் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 18 மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications