ஓபிஎஸ்சுக்கு அனைத்து கதவுகளும் அடைபட்டன! அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி மறுக்க முடியாது: காவல்துறை
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என கூறிய ஆவடி காவல் துறை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்தது.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என கூறிய இந்த கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என ஓபிஎஸ் , ஆவடி காவல் துறை ஆணையரகத்திற்கு மனு அளித்திருந்தார்.

அதிமுக செயற்குழு கூட்டம்
அந்த மனுவில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி அன்று வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழக செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.

எம்ஜிஆர் மாளிகை
இருப்பினும் அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 14 ஆம் தேதி அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக் குழு நடைபெற்ற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

அசாதாரண சூழல்
அசாதாதரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஆவடி காவல் துறை நிராகரித்துள்ளது.

ஆவடி போலீஸ் மறுப்பு
ஆவடி காவல் துறை அளித்த பதிலில் "அதிமுக பொதுக் குழு கூட்டம் தனிநபரின் உள் அரங்கத்தில் நடப்பதால் அனுமதி மறுக்க முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு அளிக்கப்படும். பொது இடத்தில் நடந்தால் மட்டுமே அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும்" என கூறிவிட்டது.
Recommended Video

பொதுக் குழு கூட்டம்
அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் , பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளனர். பெஞ்சமின் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி ஆவடி காவல் ஆணையரகம் பதிலளித்துள்ளது. பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதித்துறை, அதை மேற்கோள்காட்டிய காவல் துறை- இப்படி ஓபிஎஸ்ஸுக்கு அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications