டோட்டலா சீன் மாறுதே.. தவெகவுடன் கூட்டணி சேரும் காங்கிரஸ், பாமக?
சென்னை: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! என்பது போல 2026 சட்டமன்ற தேர்தல் களம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி இருந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. தவெகவுடன் காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த கட்சிகள் படையெடுக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக அரசியலில் "எதுவும் நடக்கலாம்" என்ற சொற்றொடருக்கு சரியான உதாரணமாக 2026 சட்டமன்றத் தேர்தல் களம் மாறி வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி தான் ஒன்றாகச் சொன்ன நிலையில், தற்போது வரும் தகவல்கள் முற்றிலும் வேறுபட்டபடி நகர்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை முதலே தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், ஆரம்ப கட்டமாக தபால் வாக்குகள் திறக்கப்பட்டதும் பல இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றது. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணிக்கை முன்னேறிய போதும், அந்த முன்னிலை பல இடங்களில் தொடர்ந்து முன்னேற்றமாகவே இருந்தது.
காலை 10 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து மாறக் கூடியவை என்றாலும், தற்போதைய நிலை தமிழக அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றக் கூடியதாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, நடிகர் விஜய் தலைமையிலான கட்சி முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்திருந்தாலும், இவ்வளவு பெரிய அளவில் முன்னிலை பெறுவது அரசியல் வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், "கிங் மேக்கர்" மட்டுமல்லாமல் நேரடியாக ஆட்சி அமைக்கும் நிலைக்கும் தவெக செல்லக் கூடும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்கால அரசியல் கூட்டணிகள் பற்றிய பேச்சுகளும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தவெக அணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். முடிவுகள் தெளிவான பின்னர் கூட்டணி அரசியல் புதிய திருப்பத்தை சந்திக்கலாம்.
இதற்கிடையில், முன்னிலை நிலவரம் வெளியாகியதையடுத்து சென்னையில் உள்ள விஜய் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது நிலைமை எவ்வளவு சென்சிட்டிவாக உள்ளது என்பதை காட்டுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications