ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் ராமதாஸ், ஓரிரு நாளில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன் என்று கூறியிருந்த நிலையில், சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து மறைமுக அரசியலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சிய சசிகலாவும் அரசியலில் சீனியர் தலைவரான ராமதாஸும் இணைந்து தங்கள் செல்வாக்கை காட்ட ஆயத்தமாகி வருவதாக அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள்.

ராமதாஸ், சசிகலா
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. பாமகவின் சின்னம், பெயர் அன்புமணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இதற்கு எதிராக சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறார் ராமதாஸ். அன்புமணி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாசும் இந்த தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.
ராமதாஸ் முதலில் திமுக கூட்டணியில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், விசிக எதிர்ப்பு தெரிவித்ததால், ராமதாசின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அன்புமணி இருப்பதால் அதிமுக கூட்டணி பக்கம் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஜய்யின் தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அண்மையில் பேச்சு எழுந்தது.
ஆனால், இந்த தகவலை தவெக மறுத்தது. ராமதாசின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில், நேற்று இது தொடர்பாக முடிவெடுக்க தைலாபுரத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில், சசிகலாவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 தொகுதிகளில் போட்டியிடும் ராமதாஸ்
வட மாவட்டங்களில் 40 தொகுதிகள் வரை போட்டியிட ராமதாஸ் தரப்பு முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக கட்சி தொடங்கியுள்ள சசிகலா, வேட்பாளரை நிறுத்த ஆயத்தாமி வருகிறார். புரட்சி தலைவர் எம்.ஜிஆர் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள சசிகலா, தனது ஆதரவாளர்களிடம் இருந்து விருப்ப மனுவை பெற்று வருகிறார்.
தென்னந்தோப்பு சின்னத்தில் தனது கட்சி போட்டியிடும் என்று சசிகலா அறிவித்தார். சசிகலாவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், சசிகலா தனித்தே போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த சந்திபின் போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கூட்டணி வைத்து போட்டி?
இதன் தொடர்ச்சியாக சசிகலாவும் ராமதாஸும் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக அரசியல் விமர்சர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சசிகலா தனக்கு செல்வாக்கு உள்ள தென் பகுதிகளில் வேட்பாளரை நிறுத்தினால், கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்பு உள்ளது. இது திமுகவிற்கே சாதகமாக வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் தன்னை மதிக்காத எடப்பாடி, டிடிவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற முடிவில் சசிகலாவும், அன்புமணிக்கு பாடம் புகட்ட ராமதாஸும் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், தங்கள் பலத்தை காட்ட தங்களுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் தயாராகி வருகிறார்களாம். சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்து போட்டியிடுவார்களா? இல்லை தனித்தனியே களம் இறங்க போகிறர்களா? கூட்டணி வைத்தாலும் எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.. தமிழக அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்? பின்னணி -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications