கொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த தேனீர் விருந்து உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

TN Raj bhavan decided not to host at home reception on august 15th due to covid

தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவிற்கு இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உடல் நிலையை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருவதாவும், ஆளுநர் நலமுடன் உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்தள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகையில் ஏராமளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+