ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேசன் கார்டில் திருத்தமா? பெயர் சேர்க்கணுமா? இன்றே கிளம்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் குறைதீர்ப்பினை கவனத்தில் கொண்டு, தமிழக முகாம்களை நடத்தி வருகிறது.. அந்தவகையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன..

TN Ration Ration Card Holders and food supply department is a grievance redressal camp today

இதில், அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
பாமாயில்: எனினும், தீபாவளி பண்டிகை உட்பட பண்டிகை காலம் என்பதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பொதுமக்களின் நன்மைக்காக இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுபோலவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு நடத்தி வருகிறது.

இந்த முகாம்கள் மூலம், ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இன்றைய தினமும், அக்டோபர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அலுவலகங்களில் இன்று நடைபெறவுள்ளது.

பெயர் சேர்க்கை: இதுகுறித்து அரசு அறிவிப்பினை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில், "பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்/ அதன்படி இன்று நடைபெற உள்ள குறைதீர் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். அது தவிர பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முகாம் தொடங்கியது: எனவே தங்கள் அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தற்போது முகாம் நடந்துவருவதால், பொதுமக்களும், குறைகளுடனும், கோரிக்கைகளுடனும் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+