தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 5800 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 5,609 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,63,222 ஆகும். இன்று மருத்துவமனைகளில் இருந்து 5800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,02,283 ஆகும். கொரோனாவால் இன்று மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

100ஐ தாண்டியது
தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 109ஐ தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 20 பேரும், விருதுநகரில் 9 பேரும், கோவையில் 7 பேரும் மரணம் அடைந்துள்ளனர். தேனி, காஞ்சிபுரம், தென்காசி, சிவகங்கை- 5, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் டிஸ்சார்ஜ்
மாவட்டங்களில் சென்னையில்தான் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1021 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் 1,222 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் 20 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்தனர்.

எங்கு அதிக பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் 382 பேரும், செங்கல்பட்டில் 331 பேரும், திருவள்ளூரில் 332 பேரும், விருதுநகரில் 348 பேரும், தேனியில் 305 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 215 பேரும், கோவையில் 227 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்டிவ் நோயாளிகள்
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 56,278 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 5,609 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 பேரை பரிசோதனை நடத்தினால் அதில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 27,33,295 பேருக்கு இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 2,63,222 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 5,800 பேர் குணம் அடைந்துள்ள நிலையில் , மொத்தமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,02,283ஐ தொட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 56,698 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications