தமிழகத்தில் நீடிக்கிறது 5,000க்கு கீழே கொரோனா பாதிப்பு- இன்று 4,462 பேருக்கு தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் புதன்கிழமையன்று மேலும் 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 5,083 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் இன்று மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 4, 462 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த ஒன்றரை மாதங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,000க்கும் கீழே 3-வது நாளாக தொடர்கிறது,

6.70 லட்சம் பேருக்கு பாதிப்பு
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,70,392ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 52 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10, ,423 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

5,083 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,083 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 6,17,403.

42,566 ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் மொத்தம் 42,566 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மாவட்டங்களில்..
கோவையில் 389 பேருக்கும் சேலத்தில் 274 பேருக்கும் கொரோனா உறுதியானது. மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 11 பேர் இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் கொரோனா மொத்த மரணங்கள் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications