கொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பரவலாக குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. இதில் 1,51,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,167 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

100ஐ கடந்த பாதிப்புகள்
கிராமங்களை அதிகமாக உள்ளடக்கிய தென்மாவட்டங்களில் இப்போது கொரோனா பாதிப்பு அலை உக்கிரம் காட்டுகிறது. மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் தென்மாவட்டங்கள் அதிகம்.

மதுரையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு
அதேநேரத்தில் நாம் இன்னொன்றையும் நம்பிக்கையுடன் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரையில்தான் இன்று ஒரே நாளில் 1188 பேர் வீடு திரும்பியுளனர். மதுரையில் இதுவரை மொத்தம் 3855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 3347 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல், சென்னை
திண்டுக்கல் மாவட்டத்தில் 1066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் 645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 404 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கூட 80,961 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற போதும் தற்போதைய நிலையில் 15,606 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video

செங்கல்பட்டு டிஸ்சார்ஜ்
சென்னையில் இதுவரை மொத்தம் 64,036 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 1318 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டை எடுத்துக் கொண்டால் 8741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; ஆனால் 6299 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 172 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 2269 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications