தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா - மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 987
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் மொத்தம் 660 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 83 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 743.

இந்திய அளவில் 2-வது இடம்
இதனையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 2-வது இடத்திலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 8,496 பேர் ஆண்கள்; 4,692 பேர் பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.

வீடு திரும்பிய 987 பேர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,882 . தமிழக அரசு அண்மையில் டிஸ்சார்ஜ் பாலிசியை மாற்றியதைத் தொடர்ந்து அதிக அளவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை 87
இன்று கொரோனாவால் 3 பேர் மரணமடைந்தனர். இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்திருக்கிறது. மாவட்டங்களில் சென்னையில்தான் மிக அதிகபட்சமாக 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக செங்கல்பட்டில் 58 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். திருவள்ளூர்- 23; காஞ்சிபுரம்- 14; புதுக்கோட்டை-1; தென்காசி- 1 ; தஞ்சாவூர்- 1 ; தேனி- 1; தூத்துக்குடி-1 ; விழுப்புரம்- 1; விருதுநகர்-1 ; ரயில்வே தனிமைப்படுத்துதல் முகாமில் 1 என மாவட்டங்களில் 660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா ரிட்டர்ன்
மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளில் திரும்பிய நிலையில் 2-வது கட்ட சோதனையில் 18 பேருக்கு கொரோனா இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
