விண்ணில் அதிசயம்.. நெருப்பு வளைய சூரிய கிரகணம்- 3 மணிநேரம் நீடித்தது
Recommended Video
சென்னை: விண்ணில் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு தொடங்கி பகல் 11.16 வரை சுமார் 3 மணிநேரம் நீடித்தது. இதனை பலரும் கண்டு மகிழ்ந்தனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சூரிய கிரகணம் இன்று நிகழ்வதையொட்டி பல இடங்களில் கோவில்கள் நடைசாத்தப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.
ஒடிஷா மாநிலத்தில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரிய சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் பார்க்கக் கூடாது என மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அறிவுறுத்தி இருந்தனர்.

தெளிவாக தெரிந்த கிரகணம்
தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரணகம் தெளிவாக தெரிந்தது. கர்நாடகா, கேரளாவில் இந்த அரிய சூரிய கிரகணத்தை காண முடிந்தது.

விண்ணில் 3 மணிநேரம் நீடிப்பு
இன்று காலை 8.06 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி முற்பகல் 11.06 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணில் சுமார் 3 மணிநேரம் இந்த சூரிய கிரகணம் நீடித்தது.

பிர்லா கோளரங்கில் ஏற்பாடு
இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 3 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருந்தன.

சென்னை பெசன்ட்நகர்
இதனை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் காலை முதலே பிர்லா கோளரங்கில் குவிந்திருந்தனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அடுத்தது 2031-ல்தான்
பொதுவாக சாதாரண கண்ணாடிகளைப் பயன்படுத்தி இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த சூரிய கிரகணம் 2031-ல்தான் ஏற்படும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications