சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு.. செய்யாறு விவசாயிகள் விவகாரத்தை அவையில் எழுப்ப திட்டம்?
சென்னை: சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது. சட்டசபை சிறப்புக்கூட்டத்தொடருக்காக உறுப்பினர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவருக்கான அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக அவையில் கேள்வி எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகவும் அவையில் எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சபாநாயகர் இதற்கு ஒப்புதல் அளிப்பாரா? என்பது தெரியவில்லை.

எனவே சபாநாயகர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அமளியில் ஈடுபடுவதற்கும் வெளிநடப்பு செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா வேலுமணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications