SSLC Result: தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 90.07% மாணவர்கள் தேர்ச்சி
சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு மாணவர்கள் 12 மணியில் இருந்து தேர்வு முடிவுகளை இணைய தளத்தில் பார்க்க முடியும்.
Recommended Video
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10 மணிக்கு வெளியான நிலையில், பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகள், மாணவர்கள் சார்பாக பதிவு செய்யப்பட்ட போனுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த வருடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

எத்தனை பேர்
மொத்தம் 46 லட்சம் விடைத்தாள்களை இவர்கள் எழுதி உள்ளனர். இதை திருத்தும் பணிகள் கடந்த 9ம் தேதி நிறைவு பெற்றது. இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம். இந்த பக்கங்கள் டவுன் ஆகும் பட்சத்தில், பின் வரும் பக்கங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.
http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம்

வினாத்தாள் திருத்தம்
கடந்த 10ம் தேதி திருத்தப்பட்ட 10ம் வகுப்பு வினாத்தாள் மதிப்பெண்கள் எல்லாம் சரி பார்க்கப்பட்டு, அவை மொத்தமாக கூட்டப்பட்டு, பின்னர் விடை தாள்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது இந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவை பிற்பகல் 12 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்
முன்னதாக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17-ந் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாற்றப்பட்டது. இதே நாள் இன்று காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது. 9.12 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி. பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

10ம் வகுப்பு முடிவுகள்
இந்த ஆண்டு 9.12 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். 10ம் வகுப்பில் 8.21 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4.77 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3.94 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் மாணவர்களை விட 8.55 சதவிகிதம் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 10ம் வகுப்பில் - 90.07% மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் முடிவுகளை 12 மணியில் இருந்து காண முடியம்.












Click it and Unblock the Notifications