சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட்: இந்திய அரசு பள்ளிகளில் தமிழகத்தின் ஜீவித்குமார் முதலிடம்! தனியார் பள்ளியின் ஶ்ரீஜன் 8வது இடம்

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பெற்று சரித்திரம் படைத்துள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

 கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் கேரளா; தமிழகம் 4-வது இடம் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் கேரளா; தமிழகம் 4-வது இடம்

தமிழக அளவில் ஶ்ரீஜன்

தமிழக அளவில் ஶ்ரீஜன்

நீட் தேர்வில் ஒடிஷா மாணவர் சோயிப் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றார். இதுவரை நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் யாரும் பெற்றது இல்லை. தமிழக அளவில் நாமக்கல்லை சேர்ந்த ஶ்ரீஜன் என்ற மாணவர் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஶ்ரீஜன் இந்திய அளவில் 8-வது இடம்

ஶ்ரீஜன் இந்திய அளவில் 8-வது இடம்

நாமக்கல் தனியார் பள்ளி மாணவர் ஶ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 8-வது இடம் பிடித்திருக்கிறார். இந்திய அளவில் மிக அதிகபட்சமாக சண்டிகரில் 75.64% பேரும், டெல்லியில் 75.49% பேரும் நீட் தேர்வில் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகளில் தமிழக மாணவர் முதலிடம்

அரசு பள்ளிகளில் தமிழக மாணவர் முதலிடம்

இதனிடையே இந்திய அளவில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவித்குமார். இவரது மதிப்பெண்கள் 664. இவர் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி.

தமிழகத்தில் நீட் தேர்ச்சி அதிகம்

தமிழகத்தில் நீட் தேர்ச்சி அதிகம்

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீட் தேர்வு எழுதியவர்களில் 8.87% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடப்பாண்டில் மொத்தம் 57..44% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் நீட் தேர்வில் 48.57% மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

நீட் தேர்வு எழுதியோர் விவரம்

நீட் தேர்வு எழுதியோர் விவரம்

தமிழகத்தில் மாநில அளவில் மாணவி மோகன பிரபா 2வது இடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மொத்தம் 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

English summary
Tamilnadu Student Jeevithkumar tops in All India Ranking No1 position in Govt school students level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X