“துணை முதல்வர் காலிங்”னு சொன்னதுமே நிலைமையே மாறிடுச்சு.. சென்னை திரும்பிய கபடி வீராங்கனைகள் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் மாநிலத்தில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பத்திரமாக தமிழ்நாடு திரும்பி உள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசிய பின்னர்தான் பாதுகாப்பாக உணர்ந்தோம் என தமிழ்நாடு திரும்பிய கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா, பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றிருந்தனர். அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

udhayanidhi stalin kabbadi

கடந்த 24 ஆம் தேதி அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், பீகார் தர்பாங்கா பல்கலைக்கழக அணிக்கும் இடையேயான போட்டியின் போது தாக்குதல் நடைபெற்றது. எதிரணி வீராங்கனைகள் ஃபவுல் செய்ததாக தமிழக வீராங்கனைகள் முறையிட்ட போது தகராறு ஏற்பட்டது. நடுவர், தமிழக வீராங்கனையை தாக்கியதாக கூறப்படுகிறது, இதனால் கைகலப்பு ஏற்பட்டது.

நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் வந்தனர். அப்போது இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால், விளையாட்டு களம் பரபரப்பானது. கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும், வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்புவார்கள் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வீராங்கனைகள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கபடி போட்டியின்போது தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பியுள்ளனர். அவர்கள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கபடி வீராங்கனைகளை விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் சந்தித்துப் பேசுகின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்னை தெரசா பல்கலைக்கழக பெண்கள் கபடி அணி பயிற்சியாளர் கலையரசி, "தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்தோம். எங்களுக்கு அருகில் அங்குள்ள டிஎஸ்பி இருந்தார். சார், ஒரு நிமிஷம் எங்கள் துணை முதல்வர் பேசுகிறார் எனச் சொன்னதுமே நிலை மாறியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பின்னர்தான் நிலைமை மாறியது. தமிழக அரசின் தலையீட்டால் நாங்கள் பாதுகாப்பாக டெல்லி அழைத்து செல்லப்பட்டோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கபடி வீராங்கனை ஜெயஸ்ரீ பேசுகையில், "போட்டியை நடத்தும் குழுவினர் தொடர்ந்து ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொண்டனர். எங்களை எதிர் அணியினர் தாக்கியபோது யாரும் தடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு தலையிட்ட பின் தான் நிம்மதியடைந்தோம். அங்கிருந்து பாதுகாப்பாக டெல்லி வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+