கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு... மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு..!
சென்னை: கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு காட்டுவதாக மத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய மக்களுக்கே தடுப்பூசி போதாத நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன என அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசுக்கு கேள்வி
தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதிலிருந்து இந்திய மக்களை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இனி எடுக்கப் போகிற நடவடிக்கைகள் என்ன ?

புரியாத புதிர்
கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு பல்வேறு தீர்வுகள் கூறப்பட்டாலும், முழு அடைப்பு தீர்வாகாது என்பது கடந்த கால அனுபவமாகும். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார பேரழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
137 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகும். அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தடுப்பூசிகளை பா.ஜ.க. அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன் ? இதுவரை 7 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.

எங்கே நீதி?
அதேபோல, தடுப்பூசியை விநியோகிப்பதிலும் மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த பாகுபாட்டினை காட்டி வருகிறது. அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிற மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு நீதி, பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு நீதியா ? உலக அரங்கில் தமது புகழை உயர்த்துவதற்காக இந்தியாவில் தயாராகும் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறையை எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிற நிலையில் இந்தியா இருக்கிறதா ? ஆனால், இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.
இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications