இளைஞர்களை அணி திரட்டுவதில் வல்லவர் உதயநிதி ஸ்டாலின்! தமிழக காங்கிரஸ் கமிட்டி புகழாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை அணி திரட்டுவதில் சாதனை படைத்த அவர், இளைஞர் நலன் சார்ந்த துறையிலும், விளையாட்டுத் துறையிலும் அரிய பல சாதனைகளை படைப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

மட்டற்ற மகிழ்ச்சி

மட்டற்ற மகிழ்ச்சி

தி.மு.கழக இளைஞர் அணி செயலாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.

அணி திரட்டுவதில்

அணி திரட்டுவதில்

ஏற்கனவே, தி.மு.கழகத்திற்கு இளைஞர்களை அணி திரட்டுவதில் சாதனை படைத்த அவர், இளைஞர் நலன் சார்ந்த துறையிலும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையிலும் பல அரிய சாதனைகளை நிச்சயம் படைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மிக மிக பொருத்தம்

மிக மிக பொருத்தம்

கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறையையும் வழங்கியிருப்பது மிக மிக பொருத்தமாகும். தமிழக அரசின் திட்டங்கள் சரியாக செயலாக்கம் பெறுகிறதா என்பதை கண்காணிக்கிற பொறுப்பின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிற பணியை இவர் சிறப்பாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மனப்பூர்வமான வாழ்த்துகள்

மனப்பூர்வமான வாழ்த்துகள்

இத்தகைய பொறுப்பை ஏற்பதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உரிய பங்கை ஆற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அவர்களது பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+