Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை! செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் அமல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் முறையை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வீடுகள், வணிக நோக்கத்தில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3.04 கோடி மின் இணைப்புகள் உள்ளனர். இந்த இணைப்புகளுக்கான மின்சாரத்திற்கு தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

tneb

இதை மின்வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட தேதி கெடுவாக கொடுக்கப்படும். அந்த கெடுவுக்குள் கரண்ட் பில் செலுத்தினால் நல்லது. இல்லாவிட்டால் மின் துண்டிப்பை மின்சார வாரிய ஊழியர்கள் செய்வார்கள். பிறகு மின் கட்டணம் செலுத்திய ரசீதை காண்பித்ததும் பியூஸ் கேரியரை போட்டுவிடுவார்கள்.

முதல் 100 யூனிட்கள் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ஒரு டேரிப் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

ஒரு வேளை மாதம் ஒரு முறை மின் கட்டணம் எனும் நடைமுறை அமலுக்கு வந்தால் மக்கள் தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தும் கட்டணத்தில் பாதி கட்டணம்தான் செலுத்த வேண்டியிருக்கும். இதனால்தான் மாதம் ஒரு முறை மின் கட்டண திட்டத்தை கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதிகளில் மாதம் ஒரு மின் கட்டணம் என்பதும் இருக்கிறது. ஆனால் இதை இன்று வரை திமுக அரசு அமல்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

திமுக ஆட்சியில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் போது அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு முறை நிறைவேற்றப்படும். தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டமானது அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3.04 கோடி ஸ்மார்ட்மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த 3 - 4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்றனர். இதை செயல்படுத்தினால் மக்களுக்கு கணிசமான அளவு பணம் மிச்சமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+